பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லாண்டு பாடிய பட்டர்பிரான் 23 எம்பெருமானுடைய மங்களத்தை மட்டிலுமே விரும்பு கின்றவரான இவ்வாழ்வார் அடியோமோடும் என்று தம்முடைய மங்களத்தையும் ஏன் விரும்புகின்றார்? என்ற வினா எழுகின்றது. மங்களா சாசனம் பண்ணு வதற்குத் தம்மைப் போன்ற அடியவர்கள் இல்லாவிடில் எம்பெருமானுக்கு என்ன தீங்கு விளைந்திடுமோ என்ற அச்சம் பற்றிய நினைவினால் (பய சங்கையினால்) மங்களா சாசனத்தில் ஊக்கமுடைய தம்முடைய மங்களத்தையும் விரும்புகின்றார் என்பதை அறிதல் வேண்டும். ஆகவே, எம்பெருமானுடைய மங்களா சாசனத்தின் அபிவிருத்திக் காகவே தம்முடைய மேன்மையையும் வேண்டுகின்றார் ன்ைபது தெளிவு. வடிவாய் ... மங்கை : பெரிய பிராட்டியாராலே எம் பேருமானுக்கு மேன்மை உண்டாகின்றது என்பது: வடிவாய்' என்று சிறப்பித்ததனால் விளங்கும், மலருக்கு மணத்தினாலும், இரத்தினத்திற்கு ஒளியினாலும் மேன்மை யுண்டாகக் காண்கின்றோமல்லவா? அவை போல என்க. * மங்கை' என்பதால் எப்போதும் மங்கைப் பருவமுடை யவள் என்பது போதரும். ஆழ்வாருக்குக் கண்ணெதிரில் தோன்றுகின்ற சங்கை அப் பாஞ்சசன் யமும் என்று கண் காணாத பொருளைக் கூறுமாறு போலே கூறலாமோ? என்னில்: தம்முடைய கண்னெச்சில் படாதபடி முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு சொல்லுகின்றார் என்பதாகக் கருதவேண்டும். அல்லது அன்று பாரதப் பெரும் போரில் அப்படிப்பட்ட அரிய பெரிய காரியங்கள் செய்த பாஞ்ச சன்யம்' என்றும், அழகிய பாஞ்சசன்யம்’ என்றும் பொருள் கொள்ளினும் அமையும். இனி, இப்பதிகத்தின் கருத்தைச் சுருக்கமாக விளக்கு வேன். இந்த ஆழ்வார் தனியராக இருந்து மங்களா சாசனம் பண்ணுவதில் மனநிறைவு பெறாமலும் , யோக்கியமான பொருளைத் தனிமையாகத் துய்ப்பது தகாது என்ற நியாயத்தைக் கொண்டும் இன்னும்