பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருப்பல்லாண்டு - தனிப்பிரபந்தமா? பெரியாழ்வார் அருளிச் செய்த பாசுரங்கள் யாவற்றை பும் தொகுத்து பெரியாழ்வார் திருமொழி என்ற பெயரில் முதலாயிரத்தில் முதலாவதாக இடம் பெறச் செய்துள்ளார் நாதமுனிகள். இன்று வெளிவந்திருக்கும் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகளின் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பதிப்பில் திருபல்லாண்டு தனிப் பிரபந்த மாகவும். முதற்பத்தில் வண்ணமாடங்கள் தொடங்கி 'வட்டு கடுவே முடிய ஒன்பது திருமொழிகளை மட்டிலும் ஒரு பத்தாகக் கொண்டும் வெளியிடப் பெற்றுள்ளள. ஏனைய பத்துகளில் மாற்றம் இல்லை. இப்பதிப்பை யொட்டியே மர்ரே கம்பெனி ராஜம் பதிப்பும் அமைத் துள்ளது. இங்ங்னம் இம்முறை தென்கலையார் சம்பிரதாய மாக அமைந்து விடுகின்றது. - - வி. பூதுர்ர் மகாவித்துவான் வேங்கடசாமி ரெட்டியார் பதிப்பில் திருப்பல்லாண்டு முதற்பத்தில் முதற்பதிகமாக அடங்கி முதற்பத்தில் பத்துத் திருமொழிகள் அடங்கி யுள்ளன. இரண்டாம் பத்து மெச்சூது என்ற திருமொழியால் தொடங்குகின்றது. இரண்டாம் பத்துத் தொடங்கி மேற். குறிப்பிட்ட பிரதிவாதி பயங்கரம் பதிப்பைப் போலவே இப்பதிப்பும் அமைந்துள்ளது, வடகலையார் இந்தச் சம்பிரதாயத்தைத் தழுவுகின்றனர் போல் பூதுTர்ப் புலவரின் பதிப்பு அமைந்து விடுகின்றது.