பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு-தனிப்பிரபந்தமா? 49 பாட்டில் பிரபந்தங்கள் மொத்தம் இருபத்து நான்கு என்றதோடு முரணுகின்றது. இதற்கு அந்தப் பாசுரம் இடைச் செருகல். தேசிகன் செய்ததன்று. ஆகையால் அதோடு விரோதம் காட்டுவது பொருந்தாது' என்று சமாதானம் கூறப்படுகின்றது. 17 ஆம் பாசுரத்தில் ஒரொருவர் என்ற பிரயோகம் அவ்வளவு பாதகம் அல்ல என்று அப்பாசுரத்தைப் பிரமாணிக்கமாகக் கொள்ளும் கருத்து ஒப்புக் கொள்ளப் பெற்றுள்ளது. அந்தக் கருத்தில் திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தமானாலும் மொத்த எண்ணிக்கை கூறப்பெற்றுள்ளது என்ற சமாதானம் தவறு என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். 17 ஆம் பாடல் இடைச்செருகல் என்று பேசச் செய்வது அங்குள்ள இருபத்து நான்கு என்ற சொற்றொடர்தான். அந்தப் பாசுரத்தில் பிரபந்தங்கள் 24 என்பதுதான் முக்கியம். அது திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் என்ற் கொள்கைக்கு முரணான காரணமாக இருப்பதால் அப் பாட்டு இடைச்செருகல் எனப்படுகின்றது. - 5. திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தமானால் பெரி யாழ்வார் திருமொழியில் முதல் பத்து பத்தாகாது, ஒன்பதேயாகும் என்பதற்குக் கூறப்பெறும் சமாதானம்: "நூறு பாசுரங்களை ஒரு பத்தாக வழங்குவது ரீவைஷ் ணவ சம்பிரதாயம். அதன்படி "வண்ண மாடங்கள் முதலாக மெச்சூது’ தொடங்கும் வரையில் நூறு பாசுரங்கள் குறையாமலிருப்பதால் முதற் பத்தின் பிரிவு குற்றமற்றதே. திருப்பல்லாண்டைச் சேர்த்தால் நூற்றுப் பத்துப் பாசுரங் கட்கு மேற்படும். இதனால் திருப்பல்லாண்டு தனி நூலாகும் என்பது. இத்தகைய சமாதானம் சிறிதும் பொருத்தமற்றது. திருவாய்மொழியில் ஒவ்வொரு பத்தி லும் 110 பாசுரங்கள் உள்ளன: இரண்டாம் பத்தில் 112 பாசுரங்கள் இருக்கின்றன். இவற்றைப் பத்தாக வழங்குகின்றவர்கள் பூரீவைணவ சம்பிரதாயத்தைச் சேராதவர்கள் என்று கொள்ள நேரிடும். இது பெருத்த வி. 4 -