பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாள் அவதாரம் st பார்த்தனுக்குப் பரந்தாமன் திவ்விய சட்சைக் (Divine eye) கொடுத்து தன்னுடைய பேருருவத்தைக் காட்டினாப் போலே இங்கு யசோதைக்கும் தன்னுடைய சுதந்திரமான இச்சையினால் இப்படிக் காட்டியருளினான் குழந்தை யாகிய கண்ணன் எனலாம். w பத்துநாளும் கடந்த இரண்டாம் நாள் ஏதோ வெற்றி கிடைத்ததுபோல் எங்கே பார்த்தாலும் தம்பங்கள் தாட்டிக் கொடி கட்டித் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது ஆய்ப்பாடி, இது குழந்தைக்குத் திருநாமம் சூட்டும் நாள். கோகுலத்து இடையர்கள் யாவரும் குழந்தைக்குக் கிருஷ்ணன் என்று திருநாமமிட்டு அக்குழந்தையைத் தங்கள் தங்கள் கையிலே எடுத்துக் கொண்டு ஆனந்தம் பொங்கி வழிய நிற்கின்றனர் (1.2:8). ஆனால், இல்லத்தினுள் அந்தப்புரத்தில், யசோதைப் பிராட்டி தன் தோழியிடம் குழந்தையைக் குறித்து ஏதோ குற்றப்பத்திரிகை படிக்கின்றாள். அதையும் கேட்போம். ‘. . . கிடக்கில், தொட்டில் கிழிய உதைத்திடும்; எடுத்துக் கொள்ளில், மருங்கை இறுத்திடும்: ஒடுக்கிப் புல்கில் உதரத்தைப் பாய்ந்திடும்: மிடுக்கி லாமையால், நான்மெலிந்தேன், நங்காய்! - —(1.2 : 9) |தொட்டில்.(இங்கே) துணித்தொட்டில், துளி; மருங்கு-இடுப்பு; புல்கில்-அணைந்தால், உதரம். வயிறு; மிடுக்கு.வலிமை.1 யசோதையின் பேச்சு இது: நங்காய்! தூளியில் கிடத் தினால், அது கிழிந்துபோகும்படி உதைக்கின்றது குழந்தை! என்கின்றாள். ஐயோ, கால் நோகுமே! எடுத்துக்கொள்வோம்' என்று ஒக்கலில் வைத்துக் கொண்டால், அப்போதும் குழந்தை இருந்த இடத்தில் இராமல் கிளம்பிக் குதித்து இடுப்பை முறித்து விடுகின்றது.