பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 விட்டு சித்தன் விரித்த தமிழ் உடனே, துட்டப்பயல்!" என்று ஆசை தீர மார்பில் அனைத்துக் கொண்டால், காலால் வயிற்றிலே பாய்த்து உதைக்கின்றது. அம்மா சக்தி இல்லை எனக்கு! நான் எப்படி மெலிந்து போனேன், பார்!’ என்று புகார் செய்யும், தாயைக் காண்கின்றோம். இப்படியெல்லாம் சேட்டை செய்யப் பிள்ளைக்குத்தான் சக்தி போதுமா?’ என்ற கவலையும் இவளை இளைக்கச் செய்தது என்பது குறிப்பு. கிருஷ்ணா துபவத்தில் ஈடுபடும் பெரியாழ்வார் அந்தத் திருமேனியழகைத் திருவடி முதல் திருமுடி வரை (பாதாதி கேசமாக) அதுபவிக்கின்றார், யசோதைப் பிராட்டியின் கண்களாலேயே மற்றப் பெண்களுக்கும் அந்தக் குழந்தை யைக் காட்ட விரும்பிய யசோதைப் பிராட்டி போலவே, இவரும் தாம் கண்ட அழியா அழகு என்னும் தத்துவத்தை அதுபவ யோக்கியரான பிறருக்கும் காணிர் காணிர்!" என்று காட்ட விரும்புகின்றார். யசோதை தானே சொல்லு கின்ற பாசுரங்களாக அருளிச் செய்தாலும் இடையில் ஆழ்வார் தமது தன்மையும் தோன்றுமாறும் அருளிச் செய்கின்றார். - . . .” திருவடியை முதலில் அருளிச் செய்ததன் காரணம் என்ன? -

பிராட்டியும் அவனும் விடினும் திருவடிகள் விடாது, திண்கழலாயிருக்கும். -

சேஷிபக்கல் சேஷயதன் இழியும் துறை, ப்ரஜை முலையிலே வாய்வைக்குமாப் போலே |திண்கழல்-உறுதியான கழல் சேவ;.தலைவன், சேஷபூதன்.அடிமை; ப்ரஜை-குழந்தை.1 - என்ற முமுட்சுப்படி வாக்கியங்கள் இதனைத்தெளிவாக்கும் . இதன் காரணமாகவே திருப்பாணாழ்வாரும் கமல. 2. முமுட்கப்படி-145,47.