பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ விட்டு சித்தன் விரித்த தமிழ் திருத்தோள்களின்மீது கவனம் செல்லுகின்றது. நாள் களோர் நாலைந்து திங்கள் அளவிலே சகடத்தை முறித்தான்; அதில் ஆவேசித்திருந்த சகடாசுரனைக் கொன்றான்; கோரப் பற்களையுடைய யூதனையின் உயிரைக் குடித்தான். இத்தகையவனின் திருத்தோள் களின் அழகை வந்து காணுங்கள்' என்கிறாள் (11), திருத்தோள்களிலிருந்து திருக்கைத் தலங்களை நோக்கு, மாது பணிக்கின்றாள். மைத்தடங் கண்ணி அசோதை வளர்க்கின்ற செய்தலை லே நிறத்துச் சிறுபிள்ளை கெய்த்தலை நேமியும் சங்கும் கிலாவிய கைத்தலங் கள்வந்து காண்ரே! - கனங்குழை வீர்! வந்து காணிரே! (1.3.12) 1மை-மையணிந்த தடவிசாலமான; கண்ணி.கண் க. ைள யு ை- ய வ ள், சிறுபிள்ளை- குழந்தை. கண்ணன் , நெய்தலை-கூர்மை பொருந்திய, நேமி. திருவாழி; நிலாவிய-அமைந்துள்ள கைத்தலம். உள்ளங்கைகள்.: . -w என்பது பாசுரம். கண்ணழகு படைத்த யசோதைப் பிராட்டி பிறர் கையில் காட்டிக் கொடாமல் வைத்த கண். 5. இது நாலு அல்லது ஐந்து மாதங்களுக்குள்ளே என்றும், (நாலும் ஐந்தும் கூடின) ஒன்பது மாதங்களுக் குள்ளே என்றும், (நாலால் பெருக்கப்பட்டஐந்தாகிய) இருபது மாதங்களுக்குள்ளே என்றும் பொருள்படும். இந்த ஆழ்வார் மங்களா சாசனபரராதலால் குறைந்த வயதில் அரிய பெரிய செயலை ஆற்றினான் என்று சொன்னால் கண்ணெச்சில் படும் என்றஞ்சி அங்ங்ணம் கண்ணேறு. வராமைக்காக, மாதம் நாலென்றும், ஐந்தென்றும், ஒன்ப தென்றும், இருபதென்றும் தெரியாதபடி மயங்க அருளிச் செய்தனர் என்று சுவைபட அருளிச் செய்வர் பூருவர்.