பக்கம்:விதியின் நாயகி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 உற்றவள்?...பாசம் வழி நடத்த, பந்தம் வழி தொடர வேண்டியதுதானே உலகானுபவம்?...” அபர்ணு என்னும் தெய்வப் பெயர் அழகேசனுள் மருக் கொழுந்து மணமாக வாசனை கூட்டியது. கிள்ளிய இடத்தி லெல்லாம் சுகந்தம் பரப்பும் பண்பு கொண்டதாயிற்றே மருக்கொழுந்து! எளிமையின் கோலம் கொண்ட மருக் கொழுந்தைத்தான் அபர்ணுவுக்குச் சாலச் சிறந்த உதாரண மாகத் தேர்ந்தெடுத்தான் அவன்: 'தம்பி, என்னமோ, என் ஆசையெல்லாம் நீ மன நிம்மதியோடவும் மனச் சந்தோஷத்தோடவும் இருக்க வேனுமிங்கறதுதான்!” பாசத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணிர் வடிந்தது. உச்சியை நோக்கினுள். பிறந்த குழந்தையை உச்சிமோந்த அந்த இன்பமிகு நன்குட்களை அவள் எண்ணிஞளோ? 'அண்ணு! அண்ணு!’ அழகேசன் திரும்பினன். தம்பியும் தங்கையும் துள்ளி மகிழ்ந்து வந்தார்கள். ஸ்கிப்பிங் கயிறு விளையாட்டுக் காட்டியது. 'அண்ணு, அம்மாவோட பேச வேண்டியதையெல்லாம் இப்பவேபேசிடு; அப்புறம் அண்ணி வந்ததுக்கப்பறம் டயம்’ கிடைக்காதாக்கும்..” ஒலிப் பதிவில் ஏற்பட்ட தவறு காரணமாக ஒரே குரலில் இரண்டு குரல்கள் பிசிறு தட்டிப் பேசுமல்லவா, அந்தப் பாங்கில் பாலாவும் குமாரும் பேசினர்கள், தாயும் தனயனும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தார்கள். - -- 'தம்பி, பார்த்தியா மறந்துபிட்டேன். உனக்கு ஏதோ ரிஜிஸ்தர் கவர் ஒண்ணு வந்திச்சு. இனி நாளைக்குக் காலம்