பக்கம்:விதியின் நாயகி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 திருமணம் செய்து கொள்வதாய் முடிவு செய்திருக்கிறேன்!” என்று உணர்ச்சி வசப்பட்டவளாகச் சொன்னதைக்கேட்ட அபர்ணு, நிஜமாகவா? ஆஹா ! என் கவலைகளையெல்லாம் ஒரு நொடியில் தீர்த்து வைக்கும் தெய்வமாக மாறிவிட்டாய், தாரணி!’ என்று தேம்பிக் கண்ணிர் பெருக்கிளுள். விவரம் தெரிந்ததும், அழகேசன் பூரித்துப் போனன். ஆம். தாரணி தெய்வமேதான். மனிதப் பிறவியின் காணக் கிடக்காத தெய்வம் அவள். என் அபர்ணுவின் மனத்துயர் துடைக்க, அவள் சார்பிலே தாரணியிடம் நான் தாது சென்று, கண்ணிரைக் காணிக்கையாக்கிக் கோரிய என் விண்ணப்பத்தைத் தேவகட்டளையாக மதித்து, தன்னைய்ே தியாகம் செய்து கொள்ளத் துணிந்திட்ட தாரணி மெய்யாகவே தெய்வம்தான். இந்த மர்மம் என்னைத்தவிர, த்ாரணியைத்தவிர, வேறு யாருக்குத் தெரியும்?...? *.* O O Ο விடிந்தது, பொழுது. தாழ் விலக்கிக் கிடந்த அறையினுள்ளே அபர்ணுவுக்காக ஒர் உறைக்கடிதம் காத்துக் கிடந்தது. 'அன்புள்ள அபர்ணு! விதியின் சேஷ்டையினுல் நான் குறைமனிதனுகிப் போனேன். எனக்குப் பூரணத்வம் நல்கியருள நீ பாடுபட்டி ருக்கிருய். அந்தப் பெண் தாரணி தெய்வம்-அழகு எனும் தெய்வம்!... நான் எங்கே? அந்தப் பேசும் பதுமை எங்கே? - 'விதி விதித்த தத்துவத்தின் நியதிக்கு நான் எப்படிச் சவால் விடுவேன்? தாரணிக்குத் திருமணம் ஏற்பாடாகி விட்டதென்னும் ஒர் இனிப்புச் சேதியை என் காதுகள் ஏற்ருல்தான், நான் இனி உன் நிழலைத் தஞ்சமடைவேன்! ... " - ki. - 1 0