பக்கம்:விதியின் நாயகி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சீஆ :: சுந்தர் சுவாரஸ்யம் இழந்தவகைத் தலையை ஆட்டி •த்தான். பொடியன் அவனைப் பார்வையால் ஊடுருவினன். வி ருக்கு மனைவிபேரில் இருக்கும் கோபத்தைப்பற்றி அவ: லுக்குத் தெரியமாட்டாதா, என்ன? ஒரு மாற்றம் தேவை. சுந்தரின் இதயம் சலனம் அடைந்தது. ஒரு நிமிஷம் கல்லாக இருந்தான். ஆட்ட பாட்டம் அற்ற ஜடதிலே. சுயப் பிரக்ஞை மீண்டது. அவன் சுந்தர் ஆளுன். போராட்டம் புயலாயிற்று; புயல் போராட்டமாயிற்று. சே! என்ன வாழ்க்கை இது!-மன உளைச்சலைப் போக்கிட ஸ்டுடியோ பக்கம் போய் வந்தால் கூட தேவலாம் போலிருந்தது. நேற் துப் பூராவும் ஸ்டுடியோவே கதி என்று எடிட்டிங் ரூமில் அடைந்து கிடந்தவன், பகலில்தான் தங்கும் இடத்துக்குதங்கும் மடத்துக்கு வந்தான். வந்ததும், ஹாயாகத் துரக்கம் போட வேண்டுமென்று திட்டமிட்டான். உடைகளைக் களேத்தெறிந்துவிட்டு, கைலியை உடுத்திக் கொண்டிருக்கை யில், இந்தப் பயல் வந்து சுந்தரின் பசியை நினைவூட்டினன். அது சமயந்தான், சுந்தருக்கும் பசியின் உணர்வு தடம் காட்டியது; தடயம் காட்டியது. உணவு வந்தது. வந்த உணவில் புதின துகையலும் வந்தது. அதில் துளி எடுத்து வாயில் போட்டு ருசிபார்த்தான். கரித்தது. உப்பு என்ருல் படு உப்பு: சே!...உப்பு நன்றியறிவுக்குத் தாஜ்மஹால். போலன்ருே!...பையனை விழுங்கிவிட அவன் யார்? கோபம் கண்களிலும் பற்களிலும் நெரிபட்டது. அதே சடுதியில் அடங்கவும் அடங்கி விட்டது. வேறு என்ன செய்துவிட முடியும் அவனல்: ஹோட்டல் முதலாளி மஜீத் லாஹெபும் கஜாதாவும் ஒன்ரு, என்ன?... 'சுஜா!...”