பக்கம்:விதியின் நாயகி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 உந்திக் கமலத்தில் உருவாகி, உருக்கொண்டு, உருக் காட்டிய தங்கப்பதுமை சுஜாதாவின் பெயர் உச்சரிப்பில் அவன் நெஞ்சு உடைபட்டது, கசிந்தது. மனச்சாட்சி சவுக்கடி தர்பார் நடத்தியது போலும் சுழித்த கண்களைக் கசக்கி விட்டவகை, கொட்டாவிவிட்டு முடித்த வேளையில், விரல்களின் ஈரம் திருஷ்டியில் நிழல் விரித்தது. திருஷ்டி கழிக்கவா? அப்படியென்ருல், அவனுக்கும் இதயம்’ என்று ஒன்று இருக்கிறதோ? . ஜாகப் சாயாவும் கையுமாக வந்தான். வந்தவன் சுந்தரைப் பார்வையிட்டான். பார்வையென்ருல் வெறும் பார்வையல்ல; மேற்பார்வை. இந்தச்சுந்தர்-நினைவுதடுமாறிக் கிடந்த நேரத்தில், இவனது உடலுக்கடியில் நிலை தடுமாறிக் கிடந்த சுஜாதாவின் போட்டோவைப் பார்த்திருக்கிருன் சிறுவன் , அனுதாபம் மேலிட்டது. எடுபிடியின் பார்வை அவனைச் சுட்டிருக்கத்தான் வேண்டும். அவமானத்தால் குன்றியதோ உடல்? குனிந்த தலையை திமிர்த்த மாட்டாமல், சாயாவைச் சூட்டோடு சூடாகக் குடித்துவிட்டான் சுந்தர். பையன் மறைந்த பின்பும், மறையாமல் இருந்த சூன்யத்தின் அநியாய ஆக்கிர மிப்பு அவனை என்னமாய் அலைக்கழிக்கிறது? 'சுஜா!’ யார் சிரிப்பது? சுஜாதாவைத் தவிர வேறு ஒருத்திக்கு இத்துணை கார்வை லயத்தோடும் மீட்டர் சுத்தமாகவும் சிரிக்கத் தெரியுமா? சிரிக்க முடியுமா? சிரித்துக் காட்ட முடியுமா? - சுந்தர் தவித்தான். தரை மீன் என்பார்களே, அப்படி. நெஞ்சுக் குருத்தை யாரோ பிய்க்கிருர்கள்!-ஐயோ, சுஜா!’ மனச் சாட்சிக்கு அழத் தெரியுமோ? இந்தத் ேதளும்பேட்டைத் தொகுதிஅவனுக்குச்சொர்க்க மாக-பூலோக சுவர்க்கமாகப் பொலிந்த காலம்-பொற்.