பக்கம்:விதியின் நாயகி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 முந்திரிக் கொட்டையாகத் தலையை நீட்டியது ஒர் அரைகுறைக் கடிதம். . நிழற்படம் தரையில் நழுவி விழ. அந்த லெட்டரை எடுத்தான் அவன். . அன்பு சுஜாதா-ஆசை சுஜாதா தனக்கு தபால் எழுது வாளென்று கனவு கண்டான் சுந்தர். அது பகற்கனவாயிற்று: சரி, அவளைச் சமாதானப்படுத்தி வரவழைத்துக் கொள்ள வேண்டுமென்று முனைந்தானே? அந்த முயற்சியையாவது நிறைவேற்றிக் கொண்டான? அதுவும் கிடையாது! ஒரு தினம்; சினிமாக் கம்பெனிக் காரை எதிர்பார்த்துக் காத்திருந் தான் சுந்தர். புத்தம் புதிதான கன்னி ஒருத்தி வந்தாள். தன்னை அறி முகப்படுத்திக் கொண்டாள். திரையுலகப் பிரவேசத்துக்கு சான்ஸ் கோரி, சிபாரிசு செய்யும்படி வேண்டினுள். முகவரி எழுதிக் கொடுத்துவிட்டு, கள்ளவிழிப் பார்வை கொண்டு புன்னகை துரவியபிறகு, அவன் பற்கள் தெரியச் சொன்ன ஆறுதல்மொழிகளே நம்பியவளாக, கைகூப்பி விடை பெற்ருள். இந்தக் கூத்தை ஹாலின் ஜன்னல் திரையை விலக்கி, சுஜாதா கண்காணிப்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க வில்லை போலும்! அஸ்தியில் ஜூரம் கண்டது. சுஜா ஊடல் கொண்டாள். சுஜா, நான் கடமையாற்றுகிற உலகம் ரொம்ப விசித் திரமானது. இம்மாதிரியான நிர்ப்பந்தங்களைத் தவிர்க்க முடிவதில்லை. ஆனல் ஒன்றை மாத்திரம் நீ நம்பியாகவே னும். நான் உன் ஒருத்திக்கே சொந்தம்:- எப்படி நீ என் ஒருவனுக்கேயாக இருக்க முடியுமோ, அப்படி...!’