பக்கம்:விதியின் நாயகி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 82 நாகராஜனை அவன் பெற்ருேர்கள் கல்யாணியை மணக் குமாறு எவ்வளவோ வேண்டிக் கொண்டனர். அவன் மறுத்து விட்டான்! கடைசியில் ஒட்டிய-ஓட்ட வேண்டிய இரு குடும்பங்களும் இரட்டைத் துருவங்களாகிவிட்டன. நாகராஜனும் கல்யாணியும் பிரிந்தார்கள்-பிரிக்கப்பட்டார் கள்-பிரிய நேர்ந்தது! தனக்கு அன்பளிப்புச் செய்த புத்தகம், புடவை வகையருக்களைத் திரும்ப அனுப்பிவிட் டாள் கல்யாணி-நாகராஜனுக்கு. நாகராஜனுக்கு அடுத்த மாதமே பெரிய இடத்தில் கல்யாணமாகி, பம்பாய் சென்று விட்டதாக அறிந்தாள், மூன்ருமவர் மூலமாக, கல்யாணியும் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தாள். அதிருஷ்டம் அவளே ஒருவகையில் கடைக்கண் பார்த்தது. பணக்கார வக்கீல் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டாள் திருச்சியில். இல்லற வாழ்வு அவள் வசம் இருபது ஆண்டு அனுபவத்தை அளித்தது. அதற்குள் அவள் வித வைக் கோலம் பூண்டாள். தன் ஒரே மகள் நளினதான் அவளுக்கு எல்லாமாக நிழலாடினள். ஆனல் நாகராஜனைப் பற்றி மட்டும் அப்புறம் அவள் காதுகளில் எந்தத் தாக்கலும் விழவில்லை. ஏளுே அதைப்பற்றி அக்கறைப்படக்கூட மனம் இடம் தர ஒப்பவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான நிலை யில் தான் அந்தப் புத்தகம்-அவளுக்கு தன் அத்தாளுல் என்ருே அன்பளிப்புச் செய்யப்பட்டுப் பிறகு விதி வசத்தால் கை மாறிய அதே புத்தகம், கல்யாணியின் கண்களில் அன்று பட்டுத் தீர்த்தது. அப்போதைய அவள் உள்ளத்தை யார் தான் அறிய முடியும்...? வாழ்வே அறியக் கூடாததொன்று தானே...! C. Ο · © . ரேடியோவில் அதுதான் கடைசி நிகழ்ச்சி. இசைத் தட்டுச் சங்கீதம் நடந்து கொண்டிருந்தது. படுக்கையில் சோர்ந்து சாய்ந்திருத்தாள் கல்யாணி, அவள் மனம் அலைகடலாகக் தத்தளித்துக் கொண்டிருந்தது.