பக்கம்:விதியின் நாயகி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j87 இரண்டாவது கடிதம்: 'அன்புள் கல்யாணி, பல பல வருஷங்கள் மறைந்து, என்னுடைய இக்கடி தத்தைக் காணும் நீ அதிசயப்படுவாய்; ஆத்திரப்படுவாய். இல்லையென்ருல், உன் மகள் நளினவும் என் மகன் சேகரனும் தம்பதிகளாவதைத் தடுத்திருப்பாயா நீ? நான் உன்னே வஞ்சிக்கவில்லை. விதி நம் இருவரையும் வஞ்சித்துவிட்டது. என் ஜாதகத்தைப் பார்த்தவர் எனக்கு தாரதோஷம்’ இருப்பதாகப் பயமுறுத்தினர். உன்னைக் கரம் பற்றி அதன் விளைவால் உன்னை நான் இழக்க மனம் துணியவில்லை. அன்று போல என்றென்றுமே நீ என் கனவுப் பதுமையாக நிலவவே நான் ஆசைப்பட்டேன். உலகின் எங்கோ ஓர் மூலையில் நீ உயிருடன் இருந்தால், என்ருகிலும் ஒர் நாள் காணலாமல்லவா? என் உடலின் உயிர்ப்பே நீயல்லவா? உண்மைக் காரணத்தை வெளியிட்டால், அதன் பலன் எந்த வகையில் நம் இருவரையும் பாதிக்குமோ என்றஞ்சியே நான் உன்னை நிராகரித்துவிட்டேன் பொதுவாக, எனக்கு வாய்த்த வளும் சேகரனே ஈன்றுவிட்ட மறு நிமிஷம் விதிவழி ஏகிவிட்டாள். கடைசியில் என் தாரதோஷம் மெய்யா யிற்று. உன்னைத் துறந்த நினைவு, என் மனைவியின் பிரிவு எல்லாம் சேர்ந்து என்னைக் கிறுக்களுக்கியது. என் செல்வக் குழந்தையையும் துறந்து கால்போன திக்கில் எங்கும் சுற்றினேன். நேற்றுத்தான் திரும்பினேன்! சேகரன்-நளின இருவரின் ஒன்றுபட்ட மனத்தைக் கேள்விப்பட்டு, உன் முகம் காண, உன்னிடம் கதை முழுவதையும் சொல்ல நான் வந்த சமயம் தான் நீ உன் மகளைக் கோபித்துக் கொண்டாய். கல்யாணி, குழந்தைகளைப் பிரிக்காதே. நாம் பிரிந்தது போதாதா? நம் பழைய பாசமும் பிணைப்பும் அவர்கள் மூலமாவது புத்துணர்வு பெறட்டும். நல்ல முடிவு என் காதில் விழச் செய். என்னை மீளவும் பைத்தியமாக்கிவிடாதே....! நளின-சேகரன் வாழ்வில் வசந்தம் நிலவச் செய்! நாகராஜன்.’