பக்கம்:விதியின் நாயகி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 வேலய்யா, எனக்குத் தலை வலிக்குது. இந்தா சாவி, உள் அறையில் பெரிய பீரோவில் சீழ் டிராயரில் ஒரு போட்டோ ஆல்பம் இருக்குது. எடுத்துவா.”

  • பிரபல நட்சத்திரம் பேனகை-பேட்டிக் கட்டுரை...-- சினிமாத் தொண்டு இதழில் காற்றில் அல்லாடிக் கிடந்தது!

ஆல்பத்தில் ஒரு புகைப்படத்தை எடுத்தாள்; வேல் விழியும் கனி இதழும் மலர்ந்தன. வேலய்யா, நீ போ...ம்...நீ வந்த இந்த ஒருவாரமாகத் தான் வேலைகள் கச்சிதமாக நடக்கின்றன. எனக்கும் திருப்தி யாகயிருக்கிறது. ஐயா பம்பாயிலிருந்து வந்ததும் உன்னைக் கண்டு ரொம்பவும் சிலாகிப்பார். உம்மாதிரி வேலைக்காரன் கிடைக்காமல் எத்தனைநாள் கஷ்டப்பட்டோம்,தெரியுமா?...” வேலய்யன் தலையைக் குனிந்து கொண்டு நூலிழைபோல சிரித்துக் கொண்டான். மூப்படைந்த மேனியில் நடுக்கம்; தாடியும் மீசையுமாகயிருந்த அவனுடைய முகமண்டலத்தில் ஒரு பனித்துளி. போய்விட்டான் இருமலுடன். ஆல்பத்திலிருந்த போட்டோவைக் சையில் எடுத்தாள் பேனகை. மேஜைமீதிருந்த தந்தச்சிமிழ் ஒன்றைத் திறந்தாள். *குமார்! உங்களை நான் என்றைக்குக் காண்பேன்? மூன்று வருஷங்களை மறைத்துவிட்டனவே இந்தக் காலண்டர்! என் நினைவு முகம் மறந்து போய் விட்டீர்களா? உங்கள் ஆசை முகம்தானே என் வாழ்வின் பற்றுக்கோடு!...ஒருமுறை, ஒரே ஒரு முறை உங்கள் முகதரிசனம் கிட்டமாட்டாதா?... குமார்!...?-வார்த்தைகள் தேய்ந்தன. நீர் மண்டிய விழிகளை நிமிர்த்தினுள். எதிர்ச் சுவரில் ஒரு என்லார்ஜ்மெண்ட்’ படம் இருந்தது. அது மோகன சுந்தரம்-மேனகை திருமணப் படம். அத்தான், என்ன மன்னிச்க மாட் டீர்களா? நான் துரோகி என்கிறீர்களா? உங்கள் அன்பை நான் மறக்கவேமாட்டேன். ஆனல் என்