பக்கம்:விதியின் நாயகி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரச்னைக்கு ஒரு சோளி: அந்த டெய்லருக்குச் சின்னமுத்து என்று பெயர். பெயர்தான் சின்னமுத்து; ஆனால், அதிர்ஷ்டத்தை அளந்து பார்த்தால், அவன் பெரிய முத்துவேதான். வந்து போன தீபாவளிச் சமயத்தில் அளவெடுக்கும் டேப்-நாடா, கத்தரி, அந்த உஷா மெஷின் ஆகியவற்றுக்கு ஒரு திமிஷமரவது மூச்சு விட நேரம் இருந்ததா, என்ன? எண்ணி இருப்துமுப்பது நாட்களிலே, எண்ண முடியாத அளவுக்குச் சில்லறையும் நோட்டுமாக ரூபாய் ஐந்நூற்றுக்கு மேல் சம்பாதித்து விட்டான் அவன்! அதன் விளைவு: தேள் கொடுக்கு மீசையும் கோழிக்கால் கிருதாவும் முளைத்தன. அவனுடைய ஆசைக் கண்ணுட்டி பவளக்கொடிக்கு ஒற்றைக் கல் மூக்குத்தியும் பண்ணிப் போட்டான். பவளக்கொடியை எண்ணும் போதெல்லாம் அவனுக்கு ஏன்தான் அந்தக் குறும்புக்காரி தெய்வானையின் ஞாபகமும் வந்து தொலைக்கிறதோ? நெஞ்சின் ஏமாற்றத் தையும் ஏக்கத்தையும் மறக்க-மரக்கடிக்க அவன் அடிக்கடி தன்னையே மறக்கவும் வேண்டியவன் ஆளுன். 5 இப்போது தைப் பொங்கல், வாசலுக்கு வந்து கொண்டிருக்கிறது.