பக்கம்:விதியின் நாயகி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 அவன் குரலில் ஒலித்த ரசபேதம் தெய்வானைக்குப் புரிந்திருக்குமோ? ஒண்ணுமில்லே. ஒரு ரவிக்கை தச்சக் கொடுக்கோணும்!’ என்ருள். "யாருக்கு? உனக்கா?’’ *வேறே யாருக்கு? எனக்கேதான்: 'பொங்கல் டயமில்ல. வேலை எக்குத்தப்பிலே குமிஞ்சு கிடக்குது. சரி: சோளி எப்பைக்கு வேணும்?”

  • ராத்திரிக்கே எனக்கு வேனும்:

‘என்னு: ராத்திரிக்கே வேணுமாக்கும்? நாளேக்கு வாங்கிக்கிடுவேன், தெய்வானைப் பொண்னே!’ என்று: இளித்தான் சின்னமுத்து இளவட்டம். ஏலாதுங்க, இன்னிக்கு ராத்திரிப் பொழுதுக்கே வேணும். ஒரு அவசரம். கட்டாயம் வேணும். ராத்திரி எந்நேரமானலும் நானே நேரில் வந்து வேணும்னலும் வாங்கிக்கிடுறேன்! நீங்க தச்சாக்க, உசத்தியாய் இருக்கு மேன்னு ரோசிச்சுத்தான் வலியத் தேடி வந்து கேட்கிறேன். பழசுபட்டதை நெஞ்சிலே போட்டு வச்சுக்காமல், அம்மான் மகள் என்கிற சொந்தத்துக்காச்சும் மனசு வச்சிங்கன்ன, சில்ாக்கியமாக்கும்!?? சின்னமுத்துவின் சின்ன மூளை பெரிய அளவில் குதிரை ஒட்டியது: ராத்திரி எந்நேரமானலும் தானே நேரிலே வந்து வாங்கிக்கிறதாகச் சொல்ருளே, இந்தப் பாவிச் சிறுக்கி: என்ன சங்கதியாம்? ஒரு வேளை, மாடப்புரு வேடன் கிட்டவே வலியவந்து தஞ்சமடையப் போகுதா? திருப்பூட்டின சிங்கப்பூர்க்காரன் சோப்ளாங்கி ஆகிட்டானே?... பலே!:நினைவுகள் சூது ஆடின. 'இந்தாங்க, ரவிக்கைத் துணி!” என்று சொல்லி ஒரு காகித உறையை நீட்டினுள் தெய்வானை,