பக்கம்:விதியின் நாயகி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அம்மா? என்ற அந்தப் பாசச் சொல், அந்தப் பெண் மனியை மெய்சிலிர்க்கச் செய்திருக்குமோ? கண்களை லாகவ மாகத் துடைத்துக்கொண்டு, ‘ஏம்ப்பா நீ அழறே?’ என்று பாசத்தோடு கேட்டாள் அவள். ஒண்ணுமில்லிங்க, அம்மா. உங்களைப் பார்த்தடியும், என்னைப் பெற்ற அம்மா ஞாபகம் மூண்டிடுச்சுங்க, அம்மா’’ என்று தழுதழுக்கக் கூறினன் பொடியன்.

  • அப்படின்ன உன் அம்மா...? தடுமாறினுள் அவள். 'எனக்கு அம்மாவும் இல்லை; அப்பாவும் கிடையாது. என்னைப் பெற்ற தாய் தகப்பன் யாரென்றே எனக்குத் தெரி யாதுங்க, அம்மா! நான் அளுதையுங்க, அம்மா!?? தேம்பினுன் சோமையா.

'அட கடவுளே!’ என்று உருகிளுள் அந்தப் பெண். 'வருத்தப்படாதே, தம்பி, திக்கற்றவங்களுக்குத் தெய்வம் துண்ண இருக்கும்!’ என்ருள். * சிறுவன் சோமையா விரக்தி மூளச் சிரித்துவிட்டு, *திக்கற்ற எனக்கு இப்போதைக்கு எங்க முதலாளி தானுங்க துணை இருக்காருங்க, அம்மா. சரி, சரி. உங்களுக்குப் பசிக் கும். உள்ளாற வந்து இதை உங்க சொந்தக் கடையாட்டம் தினைச்சுச் சாப்பிடுங்க அம்மா!” என்று கெஞ்சும் குரலில் சொன்னன். - - - சரி தம்பி. இதை என் சொந்தக் கடை மாதிரியே நினைச்சுக்கிறேன்,’ என்று சொல்லிச் சிரித்தாள் அவள், சோமையாவின் பிஞ்சுக் கரங்களைப் பற்றியபடி, சிரிப்பின் லயத்தை இனம் கண்டுகொண்ட சிற்றுண்டி திலையத்தின் உடைமைக்கார தேவர் கல்லாவை விட்டு எழுந்து வந்தார். அட, சிவகாமியா!...ஒண்னும் விசேஷம் இல்லையே?’ என்று பதட்டத்தோடு கேட்டார். "ஒண்னும் விசேஷம் இல்லிங்க, அத்தான். வீட்டிலே பொழுது போகல்லெ. மனசும் நிம்மதிப்படாது இருந்திச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/24&oldid=476434" இலிருந்து மீள்விக்கப்பட்டது