பக்கம்:விதியின் நாயகி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 பிடிக்கிறதே இல்லை. அந்த மட்டுக்கும் நல்லதுதான்!” சண் முகம் உருக்கமாகத் தெரிவித்தான். உஸ்...பட்டணி போட் டுக்க!” பெற்றவளின் அழகான மூக்கைப் பிராண்டிக்கொண்டே சிரித்தாள் மலர்விழி. கொண்டவளை ஏறிட்டுப் பார்த்தபோது, அவன் எதிர் பார்த்தபடியே, அவளது இமை விளிம்புகளிலே ஈரம் கால் பாவியிருந்தது. கணவனின் முகத்தைப் பார்த்து விட்டு, சமாளிக்க முயன்று, அரைச் சிரிப்பை வெளுப்பு மாறி வந்த் உதடுகளிலே ஏந்தினுள் ஏந்திழை. இளம் வெயில் படாமல் குழந்தையை வசம் மாற்றிக் கொண்டாள் கமலம், அது, பூரீமத் ஆஞ்சநேயர் ஆலயம். கை தொழுதான் சண்முகம். 'சாமியைக் கும்பிடு,’ என்று மனம் நெகிழ்ந்து, நா தழுதழுக்கச் சொன்னன். தயங்கிளுள் கமலம். எதை நினைப்பாள்? எதை மறப் பாள் கைத்தலம் பற்றியவனப் பார்த்தாள். அந்தப் பார் வையில் மலர் விழியும் விளையாடினுள்; விளையாட்டுக் காட்டினுள். - - - - . . . . . " நம்ம விதிக்கு ஆண்டவனே நொந்து என்ன செய்யது: நம்புளே இம்மட்டுமாவது உயிரும் உடம்புமாக வச்சிருத் கிறதே நம்ம மலர்விழிதான். ஆகச்சே, நம்மளோட இந்திக் குழந்தையின் ஆயுள் பலத்தை உத்தேசிச்சானும், பகவான். ட்ம் மனம் விட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டியது பெற்ற வர்களாகிய நம்ம கடமை... இல்லியா, கமலம்: ம்.. கும்பிடு: . . . . . - . •, புதிய உணர்வில் மெய் சிலிர்த்தாள் தாய். மலர்விழியின் நெற்றிக்கு அந்தக் குங்குமம் எவ்வளவு எடுப்பாக அமைந்துவிட்டது: kd -5 . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/33&oldid=476443" இலிருந்து மீள்விக்கப்பட்டது