பக்கம்:விதியின் நாயகி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 ரெண்டுபேரும் போய்ப் பார்த்து முடிச்சிடலாம். எங்க அண்ணியையும் பிள்ளைங்களையும் பார்க்க எனக்கு ஒரே துடிப் டாய் இருக்குங்க, அண்ணுச்சி!’ என்ருன். ஆகட்டும், என்று சொல்லி, அவன் முகத்தை ஊடுரு வினேன். பால்முகத்தில் நிரம்பி வழிந்த ஆனந்தச் சிரிப்பை யும் மீறிய வகையிலே, ஒருவிதக் களைப்பும் வேதனையும் விரவிக் கிடக்கக் கண்டேன். 'தம்பி, மதியம் சாப்பிடலையாப்பா? என்று பரிவு சூழக் கேட்டேன். அவன் சற்றே தயங்கினன். பிறகு ஆமாங்க!” என்ருன். ஏன்??? 'எங்க அப்பாரு குடிக்கிற பாவம் போதாதின்னு எங் கிட்டோ சுத்திக்கிட்டு இருக்காருங்க. காசு கொண்டாந் தால்தானே அடுப்பு எரியும்? அந்திக்கு நான் காசுகொண்டு போய்க் கொடுத்து, அரிசி வாங்கி உலை வைக்கவேனும், இதெல்லாம் எங்களுக்கு சகஜம்தானுங்க!...சமயாசமயங் களிலே எங்க அம்மாவோட மாமன் தங்கசாமி என்கிறவர் பணம் கொடுப்பார். அவர்தான் எங்கம்மாவைக் கல்யாணம் கட்டிக்கிட கனவு கண்டவராம்! அந்த ஆளும் ஊரிலே இல்லையாம்!...” என்ருன் அவன். . .

  • பணம் தருகிறேன். கொண்டு போய்க் கொடுத்திட்டு வா!’ என்று சொல்லி, பணப்பையைத் திறந்தேன்.

வேண்டாங்க. வேலை முடிஞ்சு ஒரேயடியாக வீட் டுக்குப் போயிடுறேன்,’ என்று கூறிவிட்டான் குணசீலன். நினைத்துப் பார்த்தேன். நன்ருகப் புரிந்துவிட்டது. எனக்கு. அந்தப் பிஞ்சு நெஞ்சத்திலே என்னவோ இ ஏக்கம்-என்னவோ ஒரு வேதனை அரித்துக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/53&oldid=476463" இலிருந்து மீள்விக்கப்பட்டது