பக்கம்:விதியின் நாயகி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வெளியே வந்தேன்; நடந்தேன். கதையிலே தன்னை எழுதச் சொன்னன் குணசீலன்!-இப் போது, அவனே கதையாகி விட்டானே? கதை கொடுத்தும் விட்டானே?...தெய்வமே பாசம் என்ற சக்தியை ஏன் படைத்தாய்?-மனிதர்களைப் பைத்தியமாக்கவா? பாசத்தை அறிந்தவன் நான்; பாசத்தை எழுதியவன் நான். ஆனால், தெய்வம் போல எங்கிருந்தோ வந்த அந்தச் சிறுவன் குணசீலனே ஏன் என் முகத்தில் காட்டிய்ை, முருகா... குணசீலா!...தம்பி! திண்டிவனம் நெடுஞ்சாலையை அடுத்திருந்த நரிமேட்டுப் பகுதியில் ஒரே ஜனக் கூட்டம் தெரிந்தது. எட்டிப் பார்த்தேன்: குணசீலன் சுய நினைவிழந்து மண்ணில் கிடந்தான். மேனி தெப்பமாக நனைந்திருந்தது.

  • குணசீலா தம்பி!’ என்று உணர்ச்சிப் பெருக்குடன் அலறினேன். . -

குணசீலன் விழிகளைத் திறக்கவில்லை! நான் தவித்தேன். . *உங்களோட தம்பியா ஐயா இந்த விசுக்கான்??? **also to 32 'இவ்வள்வு தங்கமான அண்ணன் இருக்கையிலே இத்தப் பிள்ளை அளுதை மாதிரி-நாதியற்ற அஞதை மாதிரி நரிமேட்டுப் பாதாளக் கேணியிலே தற்கொலை செஞ்சுக்கிட ஏன் விழுந்தாளும்?’ என்று அனுதாபப்பட்டார் நல்ல வழிப் போக்கர் ஒருவர். .. - - . . . 'தம்பி.குணசீலா’ என்று உயிரின் பலத்தை ஒன்று திரட்டி, அந்தப் பலத்தில் அன்பின் பாசத்தையும் கூட்டிக் கலந்து அழைத்தேன். சாமான்யமான அழைப்பா அது?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/56&oldid=476466" இலிருந்து மீள்விக்கப்பட்டது