பக்கம்:விதியின் நாயகி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮2ö அடுக்கி வைத்திருந்த கடிதங்களே ஒவ்வொன்ருய்ட் பிரித்தார். கடந்த முப்பது நாட்களாக வந்தவை அவை, எத்தனை எத்தனே வகை வகையான கடிதங்கள்! சிலர்-செய்தி அறிந்தவர்கள் சாந்தியின் பிரிவுக்கு அனு: தாபம் கூறியிருந்தனர். உறவினரின் கடிதங்களும் இந்தக் குழுவில் அங்கம் பெறவேண்டியவை. - இறுதிக் கடிதம்தான் சுதர்சனது உள்ளத்தில் ஏதோ ஓர் உளைச்சல் ஏற்படுத்திவிட்டது. அவரது ஒன்று விட்ட தமக்கை எழுதிய கடிதத்தில், இரண்டாம் திருமணம் பற்றிய சில குறிப்புகள் கண்டிருந்தன. புத்திமதி வாசகம் அது. ஒவ் வொரு சொல்லும் அவருக்கு உள்ளத்தைப் பற்றி எரியச் செய்தது. நெஞ்சம் பொறி பட்ட பஞ்சாயிற்று: பதில் கடிதங்கள் பறந்தன. 'அன்புச் சகோதரி அவர்கட்கு” நமஸ்காரம். உங்கள் கடிதம் கண்டேன். உங்கள் புத்தி மதிக்கும் நன்றி. தயவு செய்து இனி என் சொந்த வாழ்வில் குறுக்கிடாதிருக்க வேண்டுகிறேன். சாந்தினி என் வரை இறந்து விடவில்லை; என்னுள் அவள் உயிரோவியமாக இதோ ஆனந்த நடமிடுகின்ருளே! இன்றும் அன்றும் ஏன், என்றுமே என் சாந்தினிதான் என் துணை... உயிர்த்துணே! - . . . . . - தங்கள், சுதர்சன்.” சுதர்சனுக்கு உடம்பு அனலாய்க் காய்ந்தது. அவர் அடித்துப்போட்டாற் போலக் கிடந்தார். இலக்கிய ரசிகர் ஒருவர் பக்கத்து வீட்டு நண்பர். வந்து அவரை அடிக்கடி கவனித்தார். சுதர்சனுக்குப் பேச்சு மூச்சில்லை; விழிகள் திறக்கவில்லை. அவருக்குத் தன் உடம்பைப் பற்றிக் கவலையே இல்லை. அதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/90&oldid=476500" இலிருந்து மீள்விக்கப்பட்டது