பக்கம்:விதியின் யாமினி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அவனுக்கு நிரந்தரமான ஒரு கிராக்கி"யை உண்டாக்கின. 'மைனர் செயின் பளபளப்புக் காட்டியது. வெளிப் பூச்சு என்ருல் அதன் மவுஸ் அலாதிதானே ? 'வாங்க...உட்காருங்க ' என்று முகமன் மொழிந்தார் செந்தில்நாயகம். கூழைக்கும்பிடு போட்ட வண்ணம், அசட்டுச் சிரிப்புச் சிரித்தவாறு மகேந்திரன் அமர்ந்தான். செந்தில்நாயகம் இருப்புக் கொள்ளாமல் தவித்தார். இம் மாதிரி தருணங்களிலே அவருக்குச் சிகரெட் டப்பாதான் கை கொடுக்கும். சிகரெட் மணத்தது. 'உங்களுக்கு.? 'இப்போ வேண்டாமுங்க ' இருவரும் ஒருவரையொருவர் ஆழமாகப் பார்வையிட்டுப் புன்னகை செய்து கொண்டனர். ஏதோ ஒரு கடப்பைச் சுட்டு வது போலவும்-அவ்விவரத்தை ஞாபக மூட்டுவதாகவும் மேற்படி புன்னகை இருந்தது. - - ஒருநாள், செந்தில்நாயகத்தைச் சந்திக்க வந்த மகேந் திரன், அவருடைய முறைப்பட்ட அனுமதியைக் கோரா மலேயே தன் பாட்டில் அங்கிருந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து விட்டான். . . . . - கோபம் பற்றி வந்தது, செந்தில்காயகத்துக்கு. "உங் களே ப்போலுள்ள ஆளுங்களுக்குக் கொஞ்சம் இடம் கொடுத் தரப் போதும். தசிலமேலே உட்கார்த்திடுவீங்க!...எதுக்கும் ஒரு அளவு வேணும்.எங்கிட்ட நீங்க அன்டியூ அட்வாண் டேஜ் எடுத்துக்க பிரயத்தனப்பட்டிங்கன்ன, நீங்க இங்கே வரக்கூடாது !...” என்று எரிந்து விழுந்தார். கண்களில் சத்தம் தெறித்தது. - மகேந்திரன் பாவம், வெலவெலத்துப் போய், இருக்கை யினின்றும் எழுந்து நின்றன். 'ஐயா, இந்த ஏழையை மன்னிச்சிடுங்க: நீங்க ரொம்பக் கோபக்காசங்கண்ணு உங்களை