பக்கம்:விதியின் யாமினி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி : ஐந்து பிறவிப் பூக்கள்! ‘ஸ்டுடியோ ஹெவன் உரிமை பூண்டிருந்த மண் அப்போது செந்தில் நாயகத்தை விழுங்கி ஏப்பம்விடத் துடித்தது போல பயங்கரச் சூழலே உருவாக்கிக் காட்டிவிட்டது! அவர் கண்ணுடியைத் துடைத்துக்கொண்டு ஏறிட்டு நிமிர்ந்து நோக்கினர். மகேந்திரன் தன்னுடைய சாகசம் கிறைந்த விழிகளைத் தாழ்த்திக்கொண்டான். "சரி, நீர் உள்ளே போய்க் கச்சிதமாக விவரம் விசாரித்துக் கொண்டு வாரும்: பிறகு, ஆகவேண்டியதைக் கவனிக்கலாம். நான் அப்புறம் வருவேன்!” ஆணேயின் வடிவம் எடுத்தது அவரது பேச்சு. மகேந்திரன் உள்ளே மடங்கி கடந்தான். அவன் போனுல் என்னவாம்? இப்போது ரீமான் செந்தில் அவர்களுக்குத் துணையா இல்லாமல் போய்விட்டது?-சிகரெட் பெட்டி பிரிந்தது. புகை அலைகள் அவரது நெஞ்சலேகளோடு போட்டி கட்ட இயலவில்லை. நாலு பக்கமும் திரும்பினர். - எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாடினன் புது மைக் கவிஞன் . . . . . . . இங்கோ எங்கெங்கு கோக்கினும் ஒளிமயம்!-இப்படி நினைவு பின்னியவராக, காரை ஒதுக்கிவிட்டு, சில தப்படிகள் கடந்தார். - -