பக்கம்:விதியின் யாமினி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அல்லல் படலாமா? மதியின் பலத்தையும் தெய்வத்தின் ஆசியையும் நம்பும் நம்மை எந்த விதியும் எதுவும் செய்து விட முடியாது. அப்படியே நம்புவோம் ” என்று ஆறுதல் வசனமாகப் பேசி விளக்கினன் செந்தில்நாயகம். அவன் கல்லூரி மாணவன். அப்புறம் இருவரும் புறப்பட்டார்கள். சென்னேயில் படப் பிடிப்பு ஒன்றை வேடிக்கை பார்க்க ஆசைப்பட்டார்கள். பாகவதர் படம் ஒன்றிற்குப் படப்பிடிப்பு நடப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு உரிமை பெற்றுச் சென்ருர்கள். பாகவதர் ராஜா வேடம் புனேந்து வெண்புரவியில் விதி நெடுகிலும் பவனி வர, எதிரில் அழகின் நங்கை ஒருத்தி போதையின் வரி வடிவமாகத் தோன்றி. அந்த ராஜாவை மயக்கும் கட்டம் படமாகிக் கொண்டிருந்தது. செங்தில்நாயகம் மிகுந்த உற்சாகத்தோடு அந்த வேடிக்கையைப் பார்த்துவிட்டு, யாமினியைத் தேடினன். அவளோ, சிவந்த கன்னங்கள் கன்றிச் சிவக்க, நாணத்தின் பதுமையாகி, விழி மூடி விழி விலக்கி விளையாட்டுக் காட்டி நின்ருள். "ஷல் வி. ஸ்டார்ட்?" என்ற ஆலோசனைக்கு "ஆல் ரைட்' சொல்லி விட்டு அவள் நகர, அவனும் அவளுடைய விதியைப்போல அவளேத் தொடர்ந்தான்!.விட்ட குறை யைத் தொட்ட பராமரிப்புடன் தொடர்ந்தான்!..... 梦感 "ஐயா!...” என்று குரலில் கனத்தை ஏற்றிக் கூப்பிட் டான் மகேந்திரன். செந்தில்நாயகம் கனவை அரைகுறையாக்கிவிட்ட பர தவிப்புடன் கண்களே உருட்டி விழித்தார். 'ஓ..நீங்களா? விசாரித்தீர்களா?” என்ருர், "மற்ற விபரம் புரியவில்லை. ஆனால் நான் சொன்ன பெண்ணேக் கண்டு பேசினேன். குயில் மொழிங்கிறது. தான் தான்னு செல்லிடுச்சு!...எதுக்கும் நீங்களும் வாங்க, வந்து பார்த்தால் புரிந்துவிடுகிறது: வாங்க, லார்' துரிதப்படுத் தின்ை மகேந்திரன்.