பக்கம்:விதியின் யாமினி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 "ஐயா, என்ன இப்படி மெளனம் சாதிக்கிறீங்க?... இங்கே பாருங்க...இந்த கியூஸைப் படியுங்க! ..சரி, நானே படிக்கட்டுமா?...' - கார் நின்றது. அவர் அந்தத் தாளேப் பறித்தார். சுட்டப்பட்ட இடம் சுட்டதோ? தன் கம்பெனியில் வேலே பார்த்த ஒரு கன்னிப் பெண்ண ஆசைகாட்டி மோசம் செய்த ஒரு முதலாளியின் மிருகச் செயல் அங்கே கண்டிருந்தது. அவ்வளவுதான்! "சி..அற்ப மிருகமே!...இனிமேல் நீ என்னேத் தேடி வரப்படாது...மனிதாபிமானமே இல்லேயா உனக்கு? கடைசி யில் உன் கீழ்ப்புத்தியைக் காட்டிவிட்டாயே! எனக்கா பாடம் சொல்லித்தருகிருய்? சீ ! ஒடு!....ம்...இந்த ரூபாயை எடுத்துக் கிட்டு இறங்கி ஒடு!..."என்று சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவன் முகத்தில் அடித்து வீசினர் செந்தில்நாயகம். அவரது கைகள் பரபரத்தன. மகேங் திரனே நாலு அறை அறையவேண்டுமென்று துடித்தார். மறு கணம் நிலையை ஊகித்து உணர்ந்தார். வெளிச்சத்தில் வந்து கின்று சிகரட்டைப் பற்ற வைத்தார். பணத்தைப் பொறுக்கிக்கொண்ட மகேந்திரன் அடிபட்ட சாரைப் பாம் பாய் சரேலென்று விரைந்து மறைந்தான். கார் ஓடத் தலைப்பட்டது, தலே தெறிக்க ஓடியது. வழியில் ஆண்டவன் சங்கிதி தெரிந்தது. பிறவிப் பூக் கள் மலர்ந்து குவிந்திருந்தன. . அப்பனே : இரத்தத் திமிறில்ை நான் செய்த அந்த ஒரு தவற்றை எண்ணி எண்ணி இந்த இருபது வருஷங்களாக காகவேதனை அனுபவித்துக்கொண்டிருக்கிறேனே!...அந்தப் பாவம் ஒன்றே என் ஜென்மம் பூராவுக்கும் போதும். நல்ல வேகள், இன்று என்னேக் காப்பாற்றிய்ை, அப்பனே! என்று செந்தில்நாயகத்தின் உள்மனம் விம்மிப் புலம்பிக்கொண் டிருந்தது