பக்கம்:விதியின் யாமினி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பாய்ந்த ஒரு பெண்ணக் கண்டவுடன், "யாமினி ...யாமினி' என்று கூச்சல் போட்டபடி, காரை நிறுத்தி, இறங்கி விரைந்தார். குறுக்கு மறித்துப் பாய்ந்த ஆபீஸ் பையன் மணியைத் தான் அவர் காண முடிந்ததே தவிர, அந்த யாமினியை-அல் லது யாமினி என்று எண்ணிய அந்த ஒரு பெண்ணே-குழங் தையும் கையுமாகத் தோன்றி மறைந்த அந்தப் பெண் உரு வத்தைக் கடைசிவரை அவரால் காண முடியவே இல்லை : ஆழ்கடலை ஏமாற்றம் கக்க நோக்கினர். நெஞ்சம் பிரளயம் ஆயிற்று ! நிலவொளியில் தொடுவானம் கள்ளங்கை சிந்திக் கை கொட்டி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது !... ஒரே முகச் சாயல் கொண்ட இருவேறு பெண்மணி களின் ஆள்மாருட்டத்தின் புதிர்க்கதை ஒன்று மினர்வா வில் ஒடியது. செந்தில்நாயகம் போய்ப் பார்த்துவிட்டு வந்தார். எல் லாத் துன்பங்களேயும் மறந்து உறங்க உதவியது அப்படம் என்றே சொல்லவேண்டும். துயில் நீத்து எழுந்ததும், அவ ருள் தீர்க்கமானதொரு முடிவு உருவாகியிருந்தது. மெரின விலே கண்ட பெண் வேறு யாரோ ? அவள் யாமினி அல்ல !...யாமினியாகவும் இருக்க முடியாது !... யாமினியின் முகஜாடை கொண்ட வேறு யாரோ ஒருத்தி !...யாமினியா வது குழந்தையுடன் காணப்படுவதாவது !...என்னைக் குழப்பு வதற்கென்றுதான் கடவுள் என்னென்னவோ காட்சிகளே யெல்லாம் படம் போட்டுக் காட்டுகிருரே !...பாவம்... யாமினி !...பாவம், என் யாமினி !...ஐயோ, நான் பாவி : ... எனக்கு மன்னிப்பே கிடையாது!... கழிவிரக்கத்தின் கண் ணிர் மாலேயாக நீண்டது. - ஏறத்தாழ இருபது ஆண்டுகளின் முந்தியக் கதையை அவர் கினைக்க வேண்டியவரானர். கடந்த சில மணி நேரங் களாக, அவர் கழிந்த காலத்தில்தான் சஞ்சாரம் செய்ய