பக்கம்:விதியின் யாமினி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 லானுச் யாமினியின் தனிப்படம் ஒன்றை அவர் இருப்புப் பெட்டகத்திலிருந்தது தேடி எடுத்ததிலிருந்து அவர் இன்ன மும் அந்த நாட்களின் எல்லேயிலேயே இருந்தார். ஒரு முறை, உறையூர் வீட்டில் யாமினி மட்டுமே தனித் திருந்தாள். விதவைத்தாய் கோயமுத்துாருக்குச் சொந்தக் காரர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அவ்வப்போது வரும் வழக்கத்தை ஒட்டித் தெப்பக்குளம் பகுதியிலிருந்து செந்தில் நாயகம் அங்கு வந்தான். ஞாயிற்றுக்கிழமை நாள். அவள் இயல்பான உடைகளுடன் சாதாரணமாக இருந்தாள். ஒப் பன எதுவும் இல்லாமல் இருந்தாள். இருந்தாலும், அவ ளுடைய இயற்கையான எழில் அவளுக்குரிய அந்தத்தையும் அந்தஸ்தையும் கல்கத் தப்பவில்லை. வந்த காதலனை வர வேற்ருள். காப்பி போட்டுக் கொடுத்தாள். சர்க்கரை போட அவள் மறந்ததை அவனும் மறந்துவிட்டான். அமர்ந் திருந்தவன் அப்படியே அசந்துவிட்டான். அரை மணி கழித்து எழுந்தான். 'நண்பர்களுடன் எங்கெல்லாமோ இரவு அலேந்த அலைச்சல் ' என்ருன், . அந்தியில் மலேக்கோட்டைப் பக்கம் அவனும் அவளும் புறப்பட்டார்கள். தத்துவப்பாடத்தின் புதிய ஆசிரியரைப் பற்றிப் புகழ்ந்தான் செந்தில். அவள் அவனிடம், மிஸ்டர் செந்தில், நீங்கள் ஹாஸ் டலேவிட்டு வந்தது அவ்வளவு உசிதமாகப்படவில்லே எனக்கு ' என்ருள். மார்பகச் சேலேயைக் கொய்து போட் டுக் கொண்டாள். வண்ணத்துப் பூச்சிகள் குதித்தன! "சட்டதிட்டங்களென்ருல், எனக்கு எப்போதும் ஒத்து வருவதில்லை. நான் வளர்ந்த விதம் அது !...” என்று சொல் லிச் சிரித்தான். ஜமீன் பரம்பரையில் வந்த பிள் அளக்கு என்ன குறைவு !... х ‘. . . . மலக்கோட்டை உச்சியில் விபீஷணன் பாதத்தடியில் கின்று அவளே ஸ்ப்ை ஒன்று எடுத்தான் அவன். அந்தப் படம் வெகு சுகமாக விழுந்துவிட்டதாக அவன் சொன்னன்.