பக்கம்:விதியின் யாமினி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i kMeS eeAMMS MMeeeMe eeeMeeeSeeMtteeeeeMeee eeeMAAAA பகுதி : பத்து மிஸ்டர் செந்தில் : மக்கிமடித்த பழைய கடிதக் கற்றைகள், கூட்டிலிருந்து கிளம்பும் தேனீக்களாக உதிர்ந்தன. அவை ஒவ்வொன்றும் மனச்சாட்சியைச் சொடுக்கிய சாட்டை ஆனது. ஒரு கடிதம் கொட்டியது. கைவிரல்களேக் கொட்டியிருக்க வேண்டும். அது பிள்ளைப் பூச்சியல்ல. . அதுவே முதல் கடிதம். விளையாடத் தொடங்கிய விதியின் முதல் வினச் சுழல் அது: - மிஸ்டர் செந்தில்!

நீங்கள் பண்புகெட்ட மனிதர் என்பதை வெட்ட வெளிச்சமாக கிரூபித்துவிட்டீர்கள். இதயமற்ற கொடும்பாவி யாக நடப்பீர்களென்று கான் கனவிலும் நினைத்திருக்க வில்லையே! என் கெஞ்சின் மரணத் துடிப்பும், என் கண்களின் ரத்தக் கண்ணிரும் உம்மைச் சும்மா விட்டுவிடுமென்று. மனப்பால் குடிக்கிறீரா?.உம் வினக்கு நானே விதி என்பதை மறந்துவிடாதீர்.என்னேப் பழிவாங்கிய நீர் அதே பழியை அனுபவிக்காமல் தப்பினுல், அப்புறம் தெய்வம் என்பது இல்லை என்றே அர்த்தம்:,., . . . . . . . . . . நான் அழுகிறேன்! நீரும் அழத்தான் போகிறீர்!. -