பக்கம்:விதியின் யாமினி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| பகுதி: இரண்டு

| | முகவரி இல்லை! | செந்தில் நாயகம் சுயப்பிரக்ஞை அடைவதற்குள், காலத் தின் கைப்பிடியிலிருந்து நிமிஷங்கள் சில நழுவி ஓடிவிட்டன. அவர் பெருமூச்சைப் பிரித்த வண்ணம், வழிந்த வேர்வை மணிகளைக்கூட வழித்துவிட கினேவற்று, அப்படியே வீற்றிருந் தார். மீண்டும் விளுடிகள் சில ஊர்ந்தன. கைக்குட்டையை உதறி எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டார். பரவி வந்த வாசனைத் திரவியத்தின் சுகந்த நெடி அவரது காசியை இதப்படுத்தத் தவறவில்லை. அச்சூழல் அவருக்கு இப்போது ஆரோக்கியமான நிலையை அமைத்துக் கொடுத் திருக்கக் கூடும். அமைதி பூத்த உள்ளத்தின் பிரதிபலிப்புப் போல், அவரது முகம் விளங்கியது. ஆவலின் துரண்டுதல் மேலிட, கிழிக்கப்பட்ட உறையினின்றும் கடிதத்தைப் பிரித் தார் அவர். கடிதத்தின் முகப்புப் பிரிவில் இருந்த அந்தப் பெயரைப் பார்த்தவுடன், அவரது உள்ளம், உடல் இரண் டுமே ஒரு முறை குலுங்கி அதிர்ந்து செயலற்றுப் போய், மீண்டும் இயக்கம் பெறலாயின. கண்களே இறுக மூடினர். 'நான் கினேச்சது கரெக்ட் !. நினைவு முடியவில்லை. அதே போல, அவருள் எழுந்த அதிர்ச்சியும் முடியவில்லை ! சுவர்க் கடிகாரம் பத்து முறை ஒலித்தது. ஒய்ந்தது. பகல்செய்வோனின் இளம் பொற்கிரணங்கள் கடிகாரத்தின் கீழ் வட்டத்தை வளேத்திருந்தன. .