பக்கம்:விதியின் யாமினி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கடாட்சம்...' என்று கோவையாகவும் தெளிவாகவும் நினைத்துப் பார்த்தாள். பிறகு, அன்று மாலேயில் வெகு நேரம்வரை மங்களம் தன் கணவனுடன் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தாள். இளமையுடனும் வாத்சல்யம் பொதிந்த துடிப்புடனும், கனவின் சல்லாபம் மண்டிய பூரிப்புடனும் செந்தில்நாயகமும் உரையாடிக் குதூகலம் அடைந்துகொண் டிருந்தான். கழுத்தில் வைரநெக்லஸ் இழைந்திருந்தது. அதைச் சமன் செய்தபடி, அவள் சொன்னுள்: "அத்தான், இங்கேயே நாள் பூராகவும் உட்கார்ந்து கிட்டிருந்தால், பசிகூட தோணுது போலிருக்குது' என்ருள், மங்களம். உடனே செந்தில் நாயகம் முல்லேப் பூக்களைக் கொட்டின மாதிரி வெகு நயமாகப் பற்களேத் திறந்து சிரித்தான். 'இயற்கையை ரசிக்க வேண்டுமென்ருல், அதுக்கு என்று தனியான ஒரு மனம் வேண்டுமாக்கும். பேஷ்.உன்னிடம் அந்த மனசு இருக்குது!... நீ ஒரு காரியம் செப். எனக்கு வேளா வேளேக்குச் சமைச்சுப் போட்டுப்பிட்டு, நீ வந்து இந்த லான் பகுதியிலேயே ஹாயாக உட்கார்ந்து கொள். நீயும் உன் பசியும் உன்வரை உனக்குச் சொந்தப் பிரச்&ன கள்: அதிலே நான் குறுக்கிடுவது இப்போதைய நாகரிக மல்ல!...” என்று சிரிக்காமல் வியாக்கியானம் செய்தான். ஆல்ை, அவளோ மொக்கு விரியச் சிரித்தாள். அம்மாடி! என்னலே பசியை அவ்வளவு தைரியமாக வரவேற்க முடியா துங்க!” என்று எழுந்து உள்ளே மாடிக்கு நாடிவிட்டாள் மங்களம். . . . . கப்பல் போய்விடும். ஆனல் கரை தங்கத்தானே செய்யும்:- சொற்களும் அப்படியே! 'மங்களம்.!...மை டியர்.டார்லிங்...' இருபது வருஷத்துக் கனவையும் களிப்பையும், காதலையும், இல்வாழ்க்கை யையும், சலனத்தையும் சாந்தியையும் ஒரே மூச்சில், ப. வே.-5 - - -