பக்கம்:விதியின் யாமினி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 காசி, வெற்றிலேத் தட்டை வைத்துச் சென்ருன். வந்தவர், கையை நீட்டி, ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு உமிழ் கூட்டினர். மூக்குக் கண்ணுடியைச் செம்மைப்படுத்தினர் செந்தில் நாயகம். எழுந்தார், நிலேக்கண்ணுடி தெரிந்தது. அவருக்கு தம் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாகவும் வெறுப்பாகவும் இருந்தது. பிஞ்சில் பழுத்த பழம்' என்று ஒருமுறை தமக்குள் முனகினர். ஸ்டாண்டில் தொங்கிய ஷர்ட் அவரது மேனியை மூடியது. 'உங்கள் மனேவி மங்களத்தைப் பார்க்க வேணும்!” எடுத்த எடுப்பிலேயே மிகத் துணிவுடன்-மிக உரிமை யுடன், வந்தவர் சொன்னர், நளினமான அழுத்தமும், சாதுர்யமான பதட்டமும் மேலோடின, குரலில். செந்தில் நாயகம், இப்படிப்பட்ட ஒரு சந்திப்பையோ, இத்தகைய பேச்சையோ விரும்பாதவராக, முகம் மாறிப் போளுர். அவருக்கு அவ்வப்போது வந்துவிடக்கூடிய கெஞ் சடைப்பு, மயக்கம் ஆகிய கோய் நொடிகள் வாழ, இத்தகைய சிறு சிறு நடப்புக்கள் ஒன்றிரண்டு வாய்த்தால் போதுமே!... அப்பால் வினே விளையாட கேட்கவும் வேண்டுமா ?