பக்கம்:விதியின் யாமினி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 செந்தில்நாயகத்தின் வதனத்தில் மிச்சம் மீதம் இருந்த் ரத்தப்பசை வறள ஆரம்பித்தது. 'என்னே உங்களுக்குத் தெரியாவிட்டாலும் என் பெயர் உங்களுக்கு கினேப்பிருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன்.' என்று நூதனமான அழுத்தம் பாய்ச்சிப் பேசிஞர் மோகன சுந்தரம், . 'ஒஹோ!...அப்படியா?” "மங்களம் உள்ளே இருக்குதா?’ என்று கேட்டுக் கொண்டே, உட்புறம் திருஷ்டியைச் செலுத்துவதைக் கண்ட செந்தில்நாயகம், அம்மனிதர் கூறிய, நேசத்தோட பழகிளுேம்' என்ற அறிமுகம் இப்போது ஏதோ ஒரு விபரீதமான பொருளேக் கற்பிக்க முனேவதாக அவர் மனம் பொருமியது. தெளிவிழந்த மனத்தில் தெளிவு பிறக்கவே வாய்ப்பு இல்லையோ? 'என் சம்சாரம் பங்களுர் போயிருக்குது. ஏதானும் தகவல் இருந்தால், எங்கிட்ட சொல்லிட்டுப் போங்க, வந்த தும் சொல்லிடுறேன்!” என்ருர் செந்தில்நாயகம். “மன்னிக்க வேணும், மிஸ்டர் செந்தில்நாயகம்!. மங்களத்திடம் தனிமையிலே சில நிமிஷம் பேசவேணும். நான் இங்கேதான் இருப்பேன். மறுபடியும் காளேக்கு வந்து பார்க்கிறேன்!...” என்று சொல்லிவிட்டு, மோகனசுந்தரம் ஒயிலுடன் கையை உயர்த்தி, போய் வருகிறேன்’ என்று அடையாளம் காட்டிவிட்டுப் பிரிந்தார். இளநீல வர்ணத் துண்டு எவ்வளவு அழகாக இருந்தது : 'நடையன்கள் துளிச்சத்தம் செய்ய வேண்டுமே! அவ்வளவுதான்! . செந்தில்நாயகத்தின் கிம்மதியை அபகரித்துப் பையில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார் மோகனசுந்தரம். தரை முதலையாகத் தவியாய்த் தவித்துத் தண்ணிராய் உருகினர் திருவாளர் செந்தில் காயகம். குற்றவாளி அருண்டு போலீசுக்கு அஞ்சி நடுங்குவதைக் போல அவர் கடுங்கினர்