பக்கம்:விதியின் யாமினி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 விக்ராந்தியாகக் கம்பெனிப் பக்கம் போய்வங்தால் என்ன என்று ஒரு சபலம் தோன்றியது. அந்த அளவுக்குத் தமது உடல்நலம் இடம் தொடுக்காமல் இராது என்றே உணர்ந்தார் அவர். புறப்பட்டார். டிரைவர் கிதானமாகக் காரைச் செலுத்தினர். வழியில் சினிமா விளம்பர வண்டி ஒன்று குறுக் கிட்டது. சொந்தப் பெண்டாட்டியை மறந்து, தாசி ஒருத்தியின் நிழலில் தஞ்சமடைந்திருந்த ஒருவன், கடைசியில் தொழு நோய்க்கு ஆளாகி மனேவியின் பாதங்களில் கெஞ்சிக் கதறும் காட்சியைச் சித்திரித்த படங்கள் தள்ளுவண்டியின் இரு புறங்களிலும் ஒட்டப்பட்டருந்தன. ஏனே அவர் அப்போது மூக்குக் கண்ணுடி டப்பாவை கிமிண்டிக் கொண்டிருந்துவிட்டார். ஆலுைம், அக்காட்சி அவரை கிமிண்டிக்கொண்டே யிருந்தது. மதியத்தில் பத்திரிகைக்கு அனுப்பி வெளியிடுவதற்காக எழுதியிருந்த அந்த விளம்பரத்தாளே எடுத்துப் பார்த்தார் அவர். . . "திருமதி யாமினிக்கு, உங்களே கான் அவசியம் சந்திக்க வேண்டும். என் கதை முடிவுக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. அதற் குள் என் கடமையை நிறைவேற்றிவிடத் துடிக்கிறேன். கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அவசியம் உடனே. நீங்கள் வந்து என்னேச் சந்திப்பதற்கு உங்கள் மனம் கருணை செய்யுமென்றே நம்புகிறேன், மற்றவை நேரில்.

இப்படிக்கு,

எம். செந்தில்நாயகம்.' இவ்வுபாயத்தைப்பற்றி மானேஜரிடம் கலந்து யோசிக்க விரும்பினர் அவ்ர்.