பக்கம்:விதியின் யாமினி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி : பதின்மூன்று அதோ, யாமினி !. F அதோ, சுவர்க்கடிகாரம் பத்துத் தடவை ஒலிக்கத் தொடங்கிவிட்டது : மாடியில் தம்முடைய தனி அறையிலே அப்படியும் இப்படியுமாக நடை பயின்றவாறு இருந்தார் செந்தில்காய கம். நோயாளியின் வேஷம் கலைக்கப்பட முயன்று, அம் முயற்சியில் செம்பாதி கெலிப்பும் எய்திய கு தூலகத் துடன் அவர் காணப்பட்டார். ஷேவிங் செய்துகொள்ளத் தான் இருந்தார். ஆனால், ஏனே அவர் அவ்வாறு செய்து கொள்ளவில்லை. எதிர்ப்புறம் இருந்த விரிசடைக் கடவுளின் மைந்தன் படத்தை வெறிக்க வெறிக்கப் பார்ப்பதும், அதே சடுதியில் மாடி வராந்தாவின் ஊடே கீழே எட்டிப் பார்ப் பதுமாக இருந்தார். அவர் கையில் “யாமினி இருந்தாள்: ஆம், யாமினியின் நிழற்படம் இருந்தது. அவரை இத்துணே காலமாக நிழலாய்த் தொற்றி வரும் அந்த யாமினி எனும் ஒரு தத்துவம், விதியாய்-வினையாய்-பழங்கதையாய்புது மலராய் அவரது இதயத்தைத் துறக்காமல், அவரது கையகத்துள்ளே அடங்கிவிட்டிருந்தாள். . யாமினியை முன் தினம் சந்தித்த சம்பவம் அவருக்குக் கனப் போலவேதான் இருந்தது. ஆறுமுகக் கடவுள்தான் அறக்கருணை கொண்டு யாமினியைத் தம் பார்வையில் பட வைத்திருக்க வேண்டுமென்று அவர் திடம் பூண்டார். ஆகவே, இனிமேல் தமக்கு விடி மோட்சம் கிட்டிவிடும் என