பக்கம்:விதியின் யாமினி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வும் தீர்மானமான நெஞ்சுறுதி பெற்ருர். கார்த்திகை பாலனே கதி யென்று தவம் கிடந்தார். 'அப்பனே! என்னே இனிமேலும் நீ சோதிப்பது தர்மமா? என் வினேயை நான் அறுவடை செய்துவிட்டேன். அதற்கு ஒரு நிரூபணமாக இதோ நான் நிற்கிறேன்செல்லரித்த உடம்புடன், பூச்சி நுழைந்த நெஞ்சுடன் !... நான் செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கிட்டச்செய். இந்தத் துரோகியையும் கடைத்தேறச் செய் !...இந்த மிருகத் துக்கு ஒரு கதி மோட்சம் காட்டு !...யாமினியையும் அவள் கணவரையும் புதுமணத் தம்பதிபோல் ஆக்கி அருள் செய் !...நானும் மனிதனுக நடமாட அனுக்கிரகம் புரி ... இல்லேயேல், என் மனச்சான்று என்னை மன்னிக்காது. என் மங்களம் என்னே மன்னிக்கமாட்டாள் !...' - - பூசைக் கூடத்துக்கு நடந்து திரும்பினர் செந்தில்நாய கம். 'லில்க் ஸ்லாக்கை எடுத்துத் தரித்துக்கொண்டார். சிகரெட் புகை கக்க, அவர் இருமலேக் கக்கினர். விடிந்து, படுக்கையை விட்டுத் தாமாகவே எழுந்துவிட் டதை ஒரு பெரும் சாதனையாகவே கருதியவராக, செந்தில் நாயகம் கட்டிலே விட்டிறங்கினர். காலேக் கடன்கள் முடிந் தன. மருந்து உட்கொண்டார். இரவு செலுத்தப்பட்ட ஊசியின் நோவு கைத்தசை நார்களில் இன்னமும் உற வாடி இருந்தது. பத்திரிகையைப் புரட்டினர். நெஞ்சு வலிப் பது போலிருந்தது. தடவிக்கொண்டார். மார்பெலும்பு கள் துருத்தி நின்றன. கண்ணுடியில் பார்த்தபோது அவர் அழுதார். - - திடீரென்று அவருக்கு மோகனசுந்தரத்தின் உருவமும் அவரது பேச்சும் கினேவில் எழுந்தன. நெஞ்சுவலி கூடி வருதாகவே அவர் உணர்ந்தார். மங்களத்துக்கு இவர் அடி நாளேயிலேயே எப்படிச் சிநேகமானுர் ... அவளோடு கேசத்தோடு பழகினதாய்ப் பெருமையாய்ச் சொன்னரே !... ஒருவேளே......ஒருவேளே......மங்களத்துடன் இந்த ஆள் தவருக...? ஊஹல்ம் ! என் மங்களம் ரொம்ப சின்ஸியர் !...