பக்கம்:விதியின் யாமினி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 'தம்பி, உனக்குச் சொந்த ஊர் எங்கே ?” என்று வினவினர் அவர். சிவகங்கைச் சீமையாம் அவனுக்குச் சொந்த ஊர். படைப்பின் சூக்குமங்களே ஆராய-அல்லது சோதனை செய்ய செந்தில் நாயகம் யார் ? - அவருடைய பாதங்கள் கெஞ்சின. உள்ளே போளுர் 'ரேடியோகிராம்' அவரை அழைத்தது. மசியவில்லை. தமது அந்தரங்க அறைக்குச் சென்ருர். ஓர் ஆல்பம் கிடைத்தது. எல்லாம் போட்டோக்கள். போதையூட்டும் படங்களே ரசிக் கும் கிலேயிலா அவர் அப்பொழுது இருந்தார் : இருப்புப் பெட்டகத்தைத் திறந்தார். பிரித்தார். சணல் போட்டுக் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டைப் பிரித்தார். எல்லாம் யாமினியிடமிருந்து செங்தில் நாயகத்துக்கு வந்த கடிதங்கள் : இந்த இருபது வருஷங்களிலே குறைந் தது இரண்டாயிரம் தடவைகள் அவரைச் செத்துச் செத் துப் பிழைக்கச் செய்துவிட்ட புண்ணியத்தை-அல்லது பாவத்தை உண்டாக்கிவிட்ட விசித்திரமான முடங்கல்கள் அவை ! ஈஸ்வரா நெடுமூச்சின் இழைகள் தொடர் சேர்த் தன. அவற்றை விரலால் தீண்டவும் அஞ்சி ஒடுங்கினர் அவர். பேயைக் கண்டு குலே நடுங்குவதை ஒப்ப அவர் நடுங்கினர். எல்லாவற்றையும் அப்படியே அள்ளி ஒரே கொத்தாகப் பெட்டகத்தில் போட்டுவிட்டு, பையனின் குர லேக் கேட்டு ஓடிவந்தார். - 'அம்மா வந்திருக்காங்க !” என்ருன் மணி. 'யார், மங்களமா ?” 'இல்லீங்க, நம்ம அம்மா இல்லீங்க ...இவங்க யாரோ.பாமினிபாம் ..." 'அப்படியா ?...மாடிக்கு வழிகாட்டு ...நீ கீழேயே நில்!...” என்று தடுமாறினர் செந்தில்நாயகம். உச்சி முதல் உள்ளங்கால் வரை அதிர்ச்சி ஏற்பட்டது. குருதித் துடிப்பு மிகுந்தது. கொஞ்சநஞ்சம் இருந்த அமைதியும்