பக்கம்:விதியின் யாமினி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பிடத்தைக் குறிக்காமல் ஏன் இப்படி என்னேப் பழிக்குப் பழி வாங்குகிருய் ! உன்னுடைய இந்தச் சூதும் சூட்சமமும்தான் விதியின் விளையாட்டா ? யாமினி ....மை டியர் ட்ரீம்!...” கனவுகண்டு விழிப்பவராகத் திடுக்கிட்டு விழித்தார், அவர் ! மறுமுறையும் யாமினியின் கடிதம்தான் அவரது மனத்திை ஒத்து ஊசலாடிக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ, ஏதோ ஒரு பாட்டு காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. உன்னிப்புடன் கேட்டார். இளமையின் கட்டமைந்த நுழைவாசலில் செந்தில் நாயகம் போய் நின்ருர், உடன் கின்றவள் பெயர்தான் : யாமினி !....'பாரதி எவ்வளவு மனக்கவர்ச்சி மிகும்படி பாடி யிருக்கிருர் ! அன்றைக்கு என் நிழலாக பாமினி என் பக்கத்தில் இருந்தாள் : பாட்டுக் கவர்ந்திடவே அங்கே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்ருன் பாவலன். சரியான நோக்கம்தான் ! எனக்கும் யாமினி இருந்தாள், பாட்டின் பாட் டாக 1-பத்தினிப் பெண்ணுக 1.என் மனத்தைத் திறந்து பார்த்தவள் யாமினி. என் நிலேயைப் பாரதியின் இப்பாடலுடன் ஒப்புநோக்கிச் செப்பினேன் ...அவள் 'ம்' கொட்டினுள்.குறு விழி மயக்கி, கோலநகை தளர்த்தி, எழிலார் கெஞ்சுயர்த்தி ஆம் போட்டாள். நான் அக்கனவை-அங்கினேவை எப்படி மறப்பேன் .ஆனல் நடந்தது. எங்கே என் யாமினி ?. எங்கே என் கனவு ?...ஐயோ! ...நான் பாவி ...' தொடர்ந்து அவரது சித்தம் செயற்பட ஒப்பவில்லை. மண்டை iலித்தது, அவருள் எழுந்த அச்சம் அவரைக் காத தூரத்துக்கு விரட்டியடித்தது. அவரைக் காக்க ஒப்பாதது போல் அவரது மனச்சாட்சி விழித்தது. அவர் பயந்து எழுந் தார். எதிரில் இருந்த மங்களத்தின் சிரித்த முகம் அப்பொழுது அவருள் பாலே வார்த்தது. மனம் அமைதி கண்டது.