பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இன்னொரு பையன் தன்னுடைய தடியை ஓங்கி, ஓங்கிக் கல்லிலே பலமாகத் தட்டினான். ராகியின் காதில் அது விழவே இல்லை.

ஓர் அணில் ராகியின் அருகில் சென்றது. ராகி அதைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து ஆடிக்கொண்டே யிருந்தது.

‘படார்!’ -திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. கிராமச் சிறுவர்களிலே ஒரு போக்கிரி ராகியோடு நடனமாடிய பெண் பாம்பைச் சுட்டுவிட்டான் அது வலி தாங்காமல் துடிதுடித்து ராகியின் முன்னால் சுருண்டு விழுந்தது. இந்தக் காட்சியைக் கண்டு கிராம மக்கள் பயந்து அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டார்கள். அந்தச் சிறுவனை வாயில் வந்தபடி திட்டினார்கள். ‘ஆண் பாம்பு பழிக்குப் பழி வாங்காமல் விடாது’ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். ராகிக்கு அளவு கடந்த கோபம். வெகுநேரம் படம் எடுத்தபடியே இருந்தது.

மறு நாள் இரவு அது கிராமத்திற்குச் சென்றது. அங்கே எல்லாருடைய வீட்டுக் கதவுகளும் அடைத்துத் தாழிடப்பட்டிருந்தன. ஒரு வீட்டிலே, ஏதாவது இரை கிடைக்குமா என்று ராகி தேடிப் பார்த்தது. கொல்லைப் புறத்திலே ஒரு கோழி அதன் முட்டைகளின் மேல் உட்கார்ந்திருந்தது. ராகி அந்தக் கோழியைக் கொன்றது. முட்டைகளைக் குடித்தது. ஆனாலும், ஏனோ அதற்கு ஒரு

16