பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 பாவம், ராகியின் தைரியமெல்லாம் பறந்துவிட்டது. வலி தாங்காமல் துடிதுடித்துக் கொண்டே கூடையின் அடியிலே கிடந்தது. ‘இந்தப் பாம்பாட்டி வீட்டுப் பளபளப் பான சட்டிகளையும், தட்டுகளையும்தான் நான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? என் சொந்த வீட்டிற்குப் போய் அங்கேயுள்ள இலைகளையும், புற்களையும் இனிமேல் காணவே முடியாதா?’ என்று ஏங்கியது.

மறுநாள் பாம்பாட்டி ஒரு சிறு தட்டிலே பாலை ஊற்றி ராகியின் முன்னால் வைத்தான். ராகி அதை ஜாக்கிரதையாக ருசி பார்த்தது. அது மிகவும் ருசியாக இருக்கவே ஒரு சொட்டு விடாமல் குடித்துத் தட்டைக் காலி செய்தது.