பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒரு வழியாகச் சென்னை வந்து சேர்ந்தார்கள்.

சென்னை மூர் மார்க்கெட்டில் அன்றுதான் ராகி முதல் முதலாக வித்தை காட்டியது. வித்தையைப் பார்க்க ஏராளமான கூட்டம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் கூடிவிட்டார்கள். கீரியுடன் சண்டை போடுவதுபோல ராகி பாசாங்கு செய்யும். அந்தச் சண்டையைப் பார்த்துக் குழந்தைகள் எல்லாம் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைவார்கள்.

பொய்ச் சண்டை போடுவது ராகிக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனாலும், குழந்தைகள் குதூகலம் அடைவதைப் பார்த்து அது ஜோராகச் சண்டை போட்டது.

கீரியுடன் பொய்ச்சண்டை போடுவது, மகுடி வாசிப்பதற்குத் தகுந்தபடி படம் எடுத்து ஆடுவது-இப்படியே ராகி தன் வாழ்நாளைக் கழித்து வருகிறது. அடுத்த தடவை மூர் மார்க்கெட் பக்கம் போகும்போது பாருங்கள். அங்கே வட்டமாக ஒரு பெரிய கூட்டம் கூடியிருக்கும். அந்தக் கூட்டத்திலே புகுந்து பார்த்தால், நடுவில் அழகான ஒரு பாம்பு, அருமையான வித்தைகளை யெல்லாம் செய்து காட்டிக்கொண்டிருக்கும்.

அந்தப் பாம்புதான் ராகி !

அது இப்படி வித்தை செய்வதெல்லாம் எதற்காக ! குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டுவதற்காகத்தான் !

24