பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனைத் தின்ற எழுத்துக்கள் 99 இல்லாததாலும் அதுவும் பிறந்த ஓராண்டு காலத்திற்குள்ளேயே பிராணனை விட்டுவிட்டது. இதனால் எனக்கு ஏற்பட்ட இழப்பு மிகப்பெரியது" விந்தன் வாழ்க்கையில் எத்தனையோ இழப்புகளை கண்டிருக்கிறார் ஆனால் "பசிகோவிந்தம் 'அன்பு அலறுகிறது' 'மனிதன் மாறவில்லை "தெரு விளக்கு ஆகிய நான்கு புத்தகங்களை எழுதியதால் ஏற்பட்ட இழப்பு மிகப்பெரியது அவர் வாழ்க்கையில் அவ்வப்போது அந்தப் புத்தகங்கள் அவரை மிரட்டின; துன்புறுத்தின, சிரித்து சிரித்தே பழித்தன, இலக்கிய உலகில் இருட்டடிப்பு செய்தன அந்தப் புத்தகங்களில் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருந்தார்கள் ஆனால், ஆதரவாளர்கள் தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். ஆனாலும் விந்தனின் எழுத்தில் மதிப்பு வைத்திருந்த ஒரு சிலரின் ஆதரவால்தான் அவர் சில காலம் வாழ முடிந்தது. விந்தன் சொல்வார். "வாழ்ந்தாலும் லோ சர்க்கிளோடு வாழ்வேன்; செத்தாலும் 'லோ சர்க்கிளோடு சாவேன்!" அவ்வாறே அவர் மரணம் நிகழ்ந்தது.