பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைப் பாதையிலே 15 விசாரித்தபோது, இராஜாபாதர் கோவிந்தனை பேராசிரியர் முன் நிறுத்தினார் கோவிந்தனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது இத்தோடு தொலைந்தோம் எனும் அச்சத்தோடு இருந்தார் எதையும் யதார்த்தமாகப் பேசும் இராஜாபாதர் இவன்தான் என்று அதிகாரியின் தோராணையில் சொல்லி நிறுத்தாமல் இவன் நல்லா கதையெல்லாம் எழுதுவான் சார்' எனப் பெருமிதத்தோடு கூறி தன் நண்பனை ஒரு படைப்பாளியை அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் கல்கி பார்வையை உயர்த்தி கோவிந்தனை வியப்போடு பார்த்து 'அப்படியா பேஷ் ஒரு கதை எழுதி கொண்டு வா பார்க்கலாம்' என்றதும் ஏற்கெனவே நடுங்கிக் கொண்டிருந்த கோவிந்தனின் உடம்பு மேலும் நடுங்கியது. நாம் எங்கே நிற்கிறோம் என்று புரியாத நிலை. இராஜாபாதருக்கோ ஒரு மகிழ்ச்சி. நண்பர்கள் இருவரும் அன்று மாலை கீழ்ப்பாக்கத்திலிருந்து புளியந்தோப்பு வரை ஆசிரியர் கதை கேட்ட விஷயத்தைப் பற்றியே பேசிக்கொண்டே நடந்தார்கள். அன்று இரவு கோவிந்தனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. நள்ளிரவில் எழுந்து தகர விளக்கு வெளிச்சத்தில் கதை எழுத ஆரம்பித்தார். எழுதியதைப் பலமுறை படித்துப் பார்த்ததில் ஓரளவு நம்பிக்கை உண்டானபோது ஆலைச் சங்கு முழங்கியது. இரவெல்லாம் கண்விழித்து எழுதிய கதையைப் பேராசிரியர் கல்கியிடம் கொடுக்க அச்சம் கொண்ட கோவிந்தனின் கதை போர்மேன் டி.எம்.இராஜாபாதர் மூலம் துணையாசிரியர் சோமாஸ்காந்தனுக்குப் போய் அவர் வழியாகவே கல்கியின் பார்வையில் பட்டது. தேசியவுணர்வும் முற்போக்குச் சிந்தனையையும் கொண்டிருந்த கல்கி தம் பேனாவை மட்டுமே நம்பி கல்கி பத்திரிகையை ஆரம்பித் திருந்த காலகட்டத்தில் கோவிந்தனின் கதையில் காணப்பட்ட மாற்றத்தை எளிய தமிழ்நடையை கவனித்து இதயபூர்வமாக வரவேற்று 'சபாஷ் ரொம்ப நன்னாயிருக்கு தொடர்ந்து எழுது' என்று பாராட்டினார். கோவிந்தன் ஆரம்பத்தில் கல்கி பாப்பா மலர் பகுதிக்கு வி.ஜி. என்னும் பெயரில் கதைகள் எழுதினார் அரைப் பக்கம் ஒரு பக்கம் அளவில். வி.ஜி என்னும் பெயரை கண்ட கல்கி 'என்னப்பா! இங்கிலீஷ்காரன் மாதிரி வி.ஜி.ன்னு பெயர் வைச்சிருக்கே. 'விந்தன்ன்னு சுருக்கமாவைச்சுக்கோ கவர்ச்சியாய் இருக்கும்" என்றார் விந்தன் என்னும் பெயரை மாற்றியதோடு அவரின் வாழ்க்கையையும் மாற்றியமைத்த பெருமை கல்கிக்கு உண்டு.