பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/19

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16 விந்தன் பேராசிரியர் கல்கியால் பாராட்டப்பெற்ற விந்தன் எழுதுவதற் கென்று நேரத்தையும் காலத்தையும் எதிர்பார்த்து கொண்டிருக்காமல் நேரம் கிடைத்தபோதெல்லாம் எழுத ஆரம்பித்தார். சில கதைகளை கேஸ்களுக்கிடையே அமர்ந்து எழுதியதும் உண்டு. ஒருநாள் அச்சகத்தில் ஒய்வான நேரத்தில் ஸ்டோன் பக்கத்தில் சக தொழிலாளிகளின் பேச்சுக்களுக்கிடையே இரண்டு கால்களையும் சுகமாக நீட்டிக் கொண்டு விந்தன் எழுதிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் அச்சகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். கல்கி இதழ் காங்கிரஸ் சார்புடைய இதழ் ஆனதால் அக் கட்சி சார்புடைய அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் அடிக்கடி கல்கி அலுவலகத்துக்கு வருகை தந்து அச்சகத்தைப் பார்வையிடுவதுண்டு. சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் சென்னைக்கு வந்த பொழுதெல்லாம் ஒரு நிமிடமாவது கல்கி அலுவலகத்திற்கு வந்துவிட்டுதான் போவார். இதைப்போலவே காந்தியார் குடும்பத்துக்கும் கல்கி இதழோடு நெருக்கம் உண்டு. ஒரு காலத்தில் கல்கி இதழ் 'இந்துஸ்தான் டைம்ஸ் என்னும் ஆங்கில ஏட்டுடன் இணைந்து உலகச் சிறுகதை போட்டி நடத்தியதுண்டு. இவ்வேட்டின் ஆசிரியரும் காந்தியாரின் மூத்த புதல்வருமான தேவதாஸ் காந்தி கல்கி அச்சகத்துக்கு வருகை தந்தபோது திரு. சதாசிவம் வந்தவருக்கு அச்சகத்தை காட்டிய நேரத்தில் விருந்தாளி யார் எவர் என்று தெரியாவிட்டாலும் உடன் வந்தவர் தம் முதலாளி என்பதை அறிந்த மாத்திரத்தில் தொழிலாளிகள் எழுந்து நின்று மரியாதை காட்டியபோது சிந்தனை உலகத்தில் இருந்த விந்தன் யார் எவர் என்பதையெல்லாம் மறந்து அவர் போக்கில் எழுதிக் கொண்டிருந்ததைக் கண்ட சதாசிவம், மிகவும் கோபம் அடைந்து அடுத்த கணம் விந்தனை வெளியில் அனுப்பிவிட்டார். அன்று லீவில் இருந்த இராஜாபாதர், அடுத்த நாள் அச்சகத்துக்கு வந்தபோது, விந்தன் கண்கலங்கியவாறு கேட்டுக்கு வெளியே நின்றிருந்ததைக் கண்டு செய்தி கேள்விபட்டு வருத்தமடைந்தார். 'ஏன்டா கதையெல்லாம் எழுதறியே உனக்கு தேவதாஸ் காந்தி தெரியாதா? இப்போ என்னடா பண்ணப்போறே? அய்யா ரொம்பக் கோவக்காரர்ன்னு உனக்குத் தெரியாதா?" நண்பரிடம் உரிமையோடு கோவித்துக் கொண்ட இராஜாபாதர் நண்பனை எப்படியாவது உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மனத்தில் வைத்துக் கொண்டு, பேராசிரியர்கல்கியிடம் சமயம்