பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/26

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறு கதைகள் 23 உள்ளத்தை உலுக்கும் 'முகத்தைச் சுளிக்காது எதிர் கொண்டழைக்கத் தகுந்தவைகளில் விந்தன் தரும் புத்தகம் சேர்க்கப்பட வேண்டியதே ஆழ்ந்த மனச்சூழல்களில் நம்மைச் செருகும் தன்மை பெற்றவை இங்குள்ள கதைகளில் சில ஒரு முறைக்கு இருமுறையாக அவற்றின் கருத்து நம்மை துழாவவைப்பதற்குக் காரணம் அதுவே அபிப்பிராயத்தின் தொனி விஷேசம் சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டு விடுகிறது சில வேளைகளில் உலுக்கியும் விடுகிறது இதற்குச் சான்று தேற்றுவார் யார்? என்ற சிறுகதை' (சமுதாய விரோதி, முன்னுரையில் கி சந்திரசேகரன்) 'செட்டியார் கடைக்கு வந்து இறங்கும் அரிசி சர்க்கரை மூட்டை முதலியவைகளை எல்லாம் சின்னசாமி கடை வாசலிலிருந்து தன் முதுகில் சுமந்து கொண்டு போய்க் கடைக்குள் அடுக்குவான் மூட்டைக்குக் காலனா வீதம், எந்தக் காலமாயிருந்தாலும் சரிதான், சமாதான காலமாயிருந்தாலும் சரிதான், எண்ணி கொடுத்து விடுவார் செட்டியார் ஆனால் என்றைக்காவது ஒருநாள் சின்னசாமி அறுபத்திநாலு மூட்டைக்கு மேல் தூக்கி அடுக்கிவிட்டு ஒரு ரூபாய்க்கு மேல் கூலி வாங்க வந்துவிட்டால் செட்டியாரின் கண்களிலிருந்து ஏனோ இரண்டு சொட்டுக் கண்ணிர் கீழே விழும் செட்டியாருக்குக் கண்ணிர் வருகிறது நமக்கோ, கோபம் கோபமாக வருகிறது ஆத்திரம் பொங்கி வருகிறது (கல்கியின் முன்னுரை) 'ஏழையின் குற்றம்' என்ற கதையில் செட்டியாரின் குணங்களை முதலாளித்துவ கொடுமைகளை மேற்கண்டவாறு சித்திரிக்கும் விந்தன், கதையின் உச்சகட்டமாக இவ்வாறு சித்திரித்து காட்டுகிறார் வழக்கம்போல் அன்று இரவு பத்து மணிக்குப் பிறகு நான் போயிட்டு வரேனுங்க!' என்றான் சின்னசாமி ‘என்னடா இவ்வளவு சீக்கிரம்' என்று கேட்டார் செட்டியார் 'இனிமேதான் என் கூலியை எடுத்துக்கிட்டுப் போய் ஏதாச்சும் வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கணும் அவ வேறே காத்துக்கிட்டுக் கிடப்பா குழந்தைகள் வேறே அழுதுக்கிட்டு இருக்கும் 'அதற்கு நீ வேலை பார்க்கக் கூடாது வீட்டிலேயே அடைந்து கிடக்கணும்' கோவிச்சுக்காதீங்க சாமி இன்னும் ஏதாச்சும் வேலையிருந்தா சொல்லுங்க செஞ்சிட்டு போறேன் ‘சரிதான் இந்த அரிசி மூட்டையை எடுத்துகிட்டுப்போய் நம் வீட்டுலே போட்டுவிட்டுப் போடா' என்று சொல்லி அன்றைய கூலி ஆறணாவை எடுத்து அவனிடம் கொடுத்தார் செட்டியார்