பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/28

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறு கதைகள் 25 அவர் வைத்துக் கொடுத்த கடையை அவரே எடுத்து கொள்ளுமாறு சொல்லுகிறான் பொதுநலவாதி கடையைப் பார்த்து திடுக்கிடுகிறார். 'ஏன் வியாபாரம் நடக்கலியா? 'பறையன் கடையிலே யாருங்க ரொட்டி வாங்கிச் சாப்பிடுவாங்க அதோ முதலியார் கடையிலே நல்லா வியாபாரம் நடக்குது எங்க ஆளுங்க கஞ்சிக்கே கஷ்டப்படறவங்க, ரொட்டி வாங்க எப்படி வருவாங்க என்ன இருந்தாலும் நான் பறையன் பறையன் தானுங்களே” “என்னடா திரும்ப திரும்ப பறையன் பறையன்னு சொல்றே?" 'நானாங்க சொல்றேன் ஊரு சொல்லுது, உலகம் சொல்லுது' 'ரொட்டி கடை, மிட்டாய் கடை வைத்து பிழைக்கக் கூடவா உனக்கு உரிமை இல்லை?” 'எனக்கு இருப்பது ஒரே உரிமைதானுங்க. அதுதான் தற்கொலை செய்து கொள்வது!" அதுக்குக்கூட அவனுக்கு உரிமையில்லை என்பது அவனுக்குத் தெரியாது போலும் கிராமத்தில் தீண்டாமை என்னும் கொடிய நோய் ஏழை எளிய உழைக்கும் மக்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதையும் அரிசனங்களுக்கு ஆலயப் பிரவேசம் நடக்கிறது. அதில் கூட அவன் கலந்து கொள்ளாமல் ஒருநாள் வேலை கிடைத்ததே தெய்வ தரிசனம் என்று எண்ணும் மக்களின் மனோபாவங்களையும் உள்ளம் உலுக்கும் வகையில் சித்திரிக்கிறார் ஒரே உரிமை என்னும் கதையில் விந்தன். பெண்கள் நிலை பொதுவாக விந்தன் காதல் கதைகள் எழுதியதில்லை. அப்படி சில கதைகள் எழுதியிருந்தாலும் அக் கதைகளில் பாலுணர்வைத் துண்டும் வகையில் பச்சையாக எழுதியதில்லை. விந்தனின் காதல் கதைகளில் பண்பும். பாசமும் பரிவும் பிணைந்திருக்கும். வளரும் சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத் தாழ்வு சாதி பேதங்கள், வர்க்க உணர்வுகள் இன்னும் பிற தடைகற்களாக இருக்கின்றன. பொதுவாகச் சொன்னால் காதலுக்குக் குறுக்கே நிற்பது பொருளாதார ஏற்றத் தாழ்வே என்பது விந்தனின் தெளிவான திடமான கொள்கை. அதிகாரபூர்வமான சட்டதிட்டங்களால் மனித வர்க்கத்தை அடக்கி ஆண்டுவிட முடியும் என்று நம்புவது அறியாமை மனிதன் நினைத்தால் அந்தச் சட்ட திட்டங்களை மீறிவிட முடியும் ஆனால் அன்பின்