பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறு கதைகள் G3 அப்படியானால் இந்த உலக வாழ்வை நீத்த அந்த அரங்க நாதன் பற்றி வருந்துவது யார்? சுற்றமும் நட்பும் சூழ இருப்பதே சுயநலத்துக்காகத்தானே! (சுற்றமும் நட்பும்) ஒரு சிலர் எவ்வளவுதான் முற்போக்குத்தனமாகப் பேசினாலும், அவர்களுக்கென்று ஒர் ஊர், உறவினர்கள் இருப்பதை மறப்பது இல்லை ஆனாலும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று முழங்குவார்கள் இத்தகைய போலிகளைக் கண்டு பொங்கி எழுவார் விந்தன் உறவினர் எதற்கு? என்ற கதையில் "அவனின்றி ஓரணுவும் அசையாது' என்கிறார்கள். அப்படி யானால் இந்த அகாண்டாகார உலகத்தில் அவ்வப்போது நடக்கும் அநீதி, அக்கிரமங்களுக்கெல்லாம் அவனே ஜவாப்தாரி ஆகி விடுகிறான் அல்லவா? ஆனால் தண்டனை மட்டும் அவனுக்கு இல்லையாம் அவனால் ஏவப்பட்ட மனிதனுக்குத்தானாம் இதென்ன வேடிக்கை இப்படி அதிசயத்துக்கு ஆளாகி ஆண்டவனைப் பற்றி ஒன்றுமே அறிந்து கொள்ளமுடியாமல் தவிப்பவர்களுக்குக் கிடைக்கும் பதில் இதுதான். அவனுடைய லீலா வினோதங்கள் அற்பர்களாகிய நமக்கு புரியாதவை நான்கு பெண்களின் தந்தையான அவர் உறவினர்களைப் பற்றி எடுக்கும் முடிவு கசப்பான மருந்தாக இருந்தாலும் இன்றைய யதார்த்த வாழ்கைக்கு நல்ல மருந்தாகும் இரண்டு பெண்கள் வயோதிகர் ஒருவருக்கும் இருமல் நோயாளி ஒருவருக்கும் மணமுடித்தார்; இரண்டு திருமணங்களையும் பார்த்துதான் செய்தார் மூன்றாவது பெண்ணுக்கு உறவுக்காரப் பையனை மண முடிக்க எண்ணி தங்கை வீட்டிற்கும் மைத்துனர் வீட்டிற்கும் அழையாத விருந்தாளியாகச் சென்று அவமானப்பட்டு வந்தது தான் மிச்சம் அப்பொழுதுதான் உறவினர்களின் உண்மை கயரூபத்தைத் தெரிந்துக் கொண்டார். அதே கால கட்டத்தில் உண்மையான தேசபக்திமிக்க இளைஞன், சிறையில் இருந்து விடுதலையாகி மாலை போட்டு வரவேற்க ஆளின்றிப் பெரும் மழையில் அவர் வீட்டு வாசலில் நின்றான், அவனுக்கு உணவு படைத்து உபசரித்தார் நாள்கள் நகர்ந்தன அவனிடமிருந்து கடிதம் வந்தது கடிதத்தில் 'நான் அவனுக்குப் போடட தண்ணீர்விட்ட சாதத்தைப் பற்றிப் பிரமாதமாக எழுதியிருந்தான் நானும் என் வாழ்நாளிலே எத்தனையோ