பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 விநதன் பழைய தோட்டம் இப்போது சமத்துவம் மிகுந்த சுதந்திர பூமியாகி விட்டது (வாழ்ப் பிறந்தவன்) பேச்சே பேராயுதம் சிலருக்கு அவர்கள் பேச்சே பேராயுதமாகும் அத்தகைய பேராயுதத்துக்குப் பலியானான் ஏழைத் தொழிலாளி வேலப்பன்: அவனுடைய சோகக்கதையைச் சொல்லுகிறது 'சுயநலம்' என்ற கதை சில பணக்காரர்கள் தம் பழைய வாழ்க்கையை எண்ணிப் பார்க்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடந்து கொள்வார்கள் ஆனால் நினைத்துப் பார்க்கும்போது அதற்காக வருந்துவார்கள் ஆனால் அந்த வருத்தத்துக்குப் பலன் இல்லாமல் போய் விடுகிறது (கவலை இல்லை) ஒரு மாந்தோப்பில் பிரம்பு கட்டிலைப் பின்னி சுயமாகத் தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ்ந்து வந்தார்கள் அவனும் அவன் மனைவியும் அன்றாடம் அதைப் பார்த்து வந்த மாதவராவ் தம் பேச்சாற்றல் மிக்க பேராயுதத்தைப் பயன்படுத்தினார் மாந்தோப்பை அழித்து அங்கே அழகானக் கட்டடம் ஒன்று கட்டி அதில் பிரம்பு கட்டில் பின்னும் வேலையை ஆரம்பிக்கலாம் உன்னிடம் பணம் இல்லாவிட்டால் நான் போடுகிறேன். உன்னிடம் தொழில் இருக்கிறது என்னிடம் பணம் இருக்கிறது லாபத்தில் இரண்டு பேரும் சம பங்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார். - காலம் கரைகிறது. மாதவராவ் கனவு பலிக்கிறது தொழில் நல்ல முறையில் நடக்கிறது வேலப்பன் மாதச் சம்பளத்தில் வேலை பார்க்கிறான் ஒருநாள் அவன் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் வேலைக்குப் போகவில்லை மறுநாள் வேலைக்குப் போனவன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றான். மாதவராவிடம் முறையிடுகிறான் அவன் அதிகாரி சொன்னது சொன்னதுதான் என்கிறான் சுயவேலையை சுயமரியாதையை இழந்து மாதச் சம்பளத்துக்கு வேலை செய்யும் அவன் செய்த தவறுதான் என்ன? தவறு இதுதான் 'பெருமைக்கு ஆசைப்படாத மனிதன் யார்? ஒருவனும் கிடையாது அதற்கு வேலப்பன் மட்டும் விதி விலக்கா என்ன? அவன் 'முதலாளி இவ்வளவு பெரிய மனிதரானதற்குக் காரணம் நான்தான்' என்று தன்னுடன் வேலைசெய்பவர்களிடம் அடிக்கடி சொல்லிக் கொள்வது வழக்கம் இது மாதவ ராவின் காதுக்கு அடிக்கடி எட்டிக்கொண்டிருந்தது அவன் அப்படிச் சொல்லிக் கொள்வது அவருடைய சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிப்பதா யிருந்தது