பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 விநதன மேல்தட்டு இடைநிலை மககள் மட்டுமே கதைக்குரியவராகப் பெரிதும் காதல் அல்லது குடும்பக் கசப்புணர்வுகள் கதைகளாயின. ஆனால சிறுகதைகள் எழுதுவதற்கு விந்தன் வகுத்துக் கொண்ட இலக்கு உன்னதமானது; உயர்ந்த மனித நேயமிக்கது. "இருப்பவனைப் பற்றி எழுதி அவனுடைய பணத்துக்கு உண்மை இரையாவதைவிட இல்லாதவனைப் பற்றி எழதி அவன அன்புக்கு உண்மை இரையாவதே மேல்" என்பதே அவரின் இலக்கு 'விந்தன் மணிக்கொடி காலத்திலேயே கதைகள் எழுத ஆரம்பித்தார் ஆனால் அவர் இலக்கியத்தை இந்திர சபையின் ஊர்வசியாகக் காணவில்லை என்கிறார் எஸ் தோத்தாத்ரி ஆம், இந்த மண்ணில் பிறந்து மழையில் நனைந்து குளிரில் நடுங்கி உதிரம் உறைந்து போன மனிதர்களிடையே வாழ்வின் சிக்கல்களில் உண்மை இலக்கியத்தைக் கண்டார் அதனால்தான் அவர் எழுத்துகள் மக்கள் இலக்கியமாகப் பாராட்டப்படுகின்றன விந்தன் கதைகளில் வரும் நிகழ்வுகள் பல நிசத்தன்மைக்கு மிகையானவை என்று கருதும் மேல்தட்டு வர்க்கத்தினர் விந்தன் காட்டும் உலகத்தைப் பற்றித் தெரியாதவர், புரியாதவர்கள் இதைத்தான் பேராசிரியர் கல்கி சொன்னார் 'பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனின் கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணிரில் பேனாவைத் தோய்த்துக் கொண்ட எழுதினாலும், அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை லட்சணங்களும் இருக்கலாம் உள்ளத்தை ஊடுருவித் தைக்கும் படியான இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை!" விந்தன் ஏழை எளிய மக்களிடையே பிறந்து வளர்ந்து பண்பட்டவர் அவருக்கு ஏழைகளின் கண்ணிரும் அதற்கான காரணமும் பிரச்னையும் தெரியும். அந்தப் பிரச்னையை ஒளிவு மறைவு இல்லாமல் உடைத்துச் சொல்கிறபோது படிப்பவர்களுக்குச் சங்கடமாகயிருக்கும் சான்றுக்கு சில காட்சிகள் பசியால் துடித்து அழும் குழந்தைக்கு பால் கொடுக்க வழியின்றி 'அபின் கொடுத்து வைத்துத் துங்க வைக்கிறான் அது ஒரேயடியாகத் தூங்கி விடுகிறது இத்தகைய கொடுமைகளை யாதர்த்தங்களை விந்தன் கதைகளில் தான் காணமுடியும். சூரியன் உதிக்கும்முன் வேலைக்குப் போய் சூரியன் மறையும் வரை வேலை பார்த்தார் மாணிக்கம். இப்படி ஓராண்டு அல்ல இரண்டாண்டு அல்ல முப்பது ஆண்டுகள் முழுசாக, ஒருநாள் காலையில்