பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 விநதன் அவர்கள் செத்தால் நானும் சாவேன்' என்று உறுதியோடு எழுதினார் இல்லாதவர்களே இல்லாதவர்களைப் பற்றி எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது விந்தன் எழுதினார் “போலிகளைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக்கும் "ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்றுநோய்களுக்கு மின்சார சிகிச்சையளிக்கும் புத்தம் புதுமுறைகளை குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக் காட்டி மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக் கொண்டிருக்கும் மனிதாபிமானத்தைத் தட்டி எழுப்பும் உணர்ச்சிமிக்க அன்றாட வாழ்வின் உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த இருந்து வருகின்ற மனித மிருகங்களின் மேல் வெறுப்பைக் கக்க உங்கள் நல்வாழ்க்கைக்கு வழி தேட முயலும் நவயுகக் கதைகளை இன்று போல் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும் தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் இதுவே என் எண்ணம் ” இதுவே விந்தன் கதைகள் பற்றி தெளிந்த தீர்மானமான முடிவு 'இருக்கும் நிலை மாற்ற ஒரு புரட்சி மனப்பான்மை ஏற்படுத்தலே' எழுத்தாளர் கடமை என்று கருத்தை கருவாகக் கொண்டவர் அவர்,