பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நாவல்கள் கண் திறக்குமா? ந்தன் ஆறு நாவல்களை முழுமையாக எழுதியுள்ளார். மனிதன் இதழில் வெளிவந்த தெருவிளக்கு முற்றுப்பெறவில்லை. வாழ்க்கை ஒரு விளையாட்டு' என்று கல்கியில் எழுதவிருந்த தொடர் எழுதவில்லை மோகத்தைக் கொன்றுவிடு என்று உலகம் பத்திரிகையில் வெளி வந்த விளம்பரத்தோடு சரி. விந்தன் நாவல்கள் எண்ணிக்கையில் சிறியதாக இருந்த போதிலும், அந்த நாவல்கள் எத்தனை விதமான எழுச்சிகளை, எண்ணக் கிளர்ச்சிகளை உண்டாக்கியுள்ளன என்பதெல்லாம் இலக்கிய உலகம் நன்கு அறிந்த செய்தியாகும். சுதந்திரத்திற்குப் பின்னால் இந்தத் தேசத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பெருத்த மாறுதல்களும் மகத்தான சாதனைகளும் ஏற்பட்டு இருப்பதாக மக்களிடையே ஒரு மயக்கம் பரவலாக இருப்பதை நாம் அறிவோம் ஆனால், அந்த மயக்கமும், அதை வரவேற்கின்ற போக்கும் விந்தன் நாவல்களில் சிறிதும் காணப்படாதது. மேலும் மேலும் அவர் எழுத்துகளை ஆய்வதற்குத் தூண்டுகிறது இலக்கியத் துறையில், நடப்பியல் முறையில் நோக்கும் முற்போக்குச் சிந்தனைப்போக்கும் கொண்டிருந்த விந்தன் இச் சமூகத்தில் சகல துறைகளிலும் மாறுதல்களும், மறுமலர்ச்சிகளும் வர வேண்டும்; வளரவேண்டும் என்று மெய்யாக நம்பியவர் அதே நேரத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களும், எழுகின்ற சிந்தனைகளும் ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரியாக இல்லாமல், அவர்கள் சுரண்டப்படாமல் சுதந்திரமாகவும், சுபீட்சமாகவும் வாழ வழிகாட்டவேண்டும் என்று எண்ணியவர் பொதுவாக விந்தன் மாறுதல்கள், மறுமலர்ச்சிகள் என்றால் எளிதில் மயங்காதவர், எதையும் பிற்போக்கு என்று புறக்கணித்து, முற்போக்கு என்றும் முத்திரை குத்தி மூடி மறைக்காதவர்